Mullivaikkal இறுதி நாட்கள்: மே 17 அன்று காணப்பட்ட மர்ம வெள்ளை வான் குறித்து புதிய தகவல்கள்

இலங்கை ராணுவத்தின் பீச்-கிராஃப்(Beach-Craft) எனப்படும் ட்ரோனில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், தற்போது வெளியாகியுள்ளது.  

2009 மே மாதத்தில் முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டம் Mullivaikkal பகுதியில் நடந்தது. மே 18 அன்று Velupillai Prabhakaran உயிரிழந்ததாக Sri Lankan Army அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த இறுதி நாட்களில் நடந்த சம்பவங்கள் குறித்து இன்னும் பல கேள்விகள் மற்றும் விவாதங்கள் நிலவுகின்றன.

மே 17, 2009 மாலை Mullivaikkal பகுதியில் எடுத்ததாக கூறப்படும் ஒரு drone image தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த படத்தில் ICRC குறியீடு போன்று மேல்புறம் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படும் ஒரு வெள்ளை வான், துப்பாக்கிச் சூடு குண்டுகள் பட்ட சுவடுகளுடன் மற்றும் பகுதி எரிந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில முன்னாள் தொடர்புகள் மற்றும் அக்காலத்தில் இருந்த ஆதாரங்கள் கூறுவதாவது, அந்த வாகனம் போர்ப்பகுதியை விட்டு வெளியேற முயன்றதாகவும், அதில் உயர்மட்ட நபர்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகங்களும் இருந்ததாகவும் தெரிவிக்கின்றன. குற்ப்பாக அதில் தலைவரின் மனைவி மதிவதை மற்றும் பொட்டு அம்மான் இருந்திருக்க கூடும் என்ற தகவல்கள் கசிந்துள்ளது. 

Mullivaikkal போரின் இறுதி கட்டம் குறித்து international human rights அமைப்புகள் மற்றும் பல்வேறு ஆய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை மற்றும் documentation மேற்கொண்டு வருகின்றனர். அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாகும்.

Previous Post Next Post

Contact Form