GO BACK

சொல்லி அடித்தது யார் ? நமாலுக்கு ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் சங்கங்கள் அழைப்பு- ஆனால் மறுப்பு !


 இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வருமான நமல் ராஜபக்சவிற்கு பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விவாதச் சங்கங்கள் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்திருந்தன. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பிரித்தானிய வாழ் தமிழ் மாணவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, தற்போது கேம்பிரிட்ஜ் யூனியன் தனது நிகழ்வை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

பிரித்தானியாவிலுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர் சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்த எச்சரிக்கை, "போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒரு அரசியல் குடும்பத்தின் பிரதிநிதியை கௌரவமான மேடைகளில் பேச அழைப்பது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அவமரியாதை" என்று குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்ச குடும்பத்தினர் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ள மாணவர்கள், இது 'கல்விசார் உரையாடல்' அல்ல, மாறாக ஒருவரது அரசியல் பிம்பத்தைச் சீரமைக்கும் முயற்சி (அரசியல் மறுவாழ்வு) என்று சாடியுள்ளனர்.

மாணவர்களின் தொடர் போராட்ட எச்சரிக்கை மற்றும் அழுத்தம் காரணமாக, பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்வதாக கேம்பிரிட்ஜ் யூனியன் தெரிவித்துள்ளது. "தற்போதைய சூழலில் இந்தத் தலைப்பில் ஒரு சமநிலையான மற்றும் திறந்த விவாதத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை" என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், ஆக்ஸ்போர்டு யூனியனில் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்வு குறித்து இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

வரலாறு திரும்புகிறதா? 

இந்தச் சம்பவம் 2010-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வை நினைவூட்டுகிறது. அன்று நமல் ராஜபக்சவின் தந்தை மஹிந்த ராஜபக்ச ஆக்ஸ்போர்டு யூனியனில் பேசப்பட்டார். அப்போது தமிழ் மக்கள் லண்டனில் திரண்டு போராட்டம் நடத்தியாலும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் அந்த உரை ரத்து செய்யப்பட்டது செய்யப்பட்டது. தற்போது நமல் ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்ப்பும் அதேபோன்ற ஒரு சூழலை பிரிட்டனில் உருவாக்கியுள்ளது.