GO BACK

£75 காசோலை விவரம் வெளிச்சம் -ஆண்ட்ரூ குறித்து வெளியான புதிய குற்றச்சாட்டு !


 பிரித்தானிய அரச குடும்பத்தைச் சுற்றிய புதிய குற்றச்சாட்டு தொடர்பாக விவாதம் உருவாகியுள்ளது. ஒரு பெண் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டில்,  ஆடையே இல்லாமல் மசாஜ் செய்யுமாறு கூறப்பட்டதாகவும்,  அதனைத் தொடர்ந்து £75 மதிப்புள்ள காசோலை அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தக் காசோலையை அவர் ஆதாரமாக காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, 2000-ம் ஆண்டில் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தனது பிரத்யேக அறைக்கு பெண் ஒருவரை அழைத்து மசாஜ் செய்து கொண்டதாகக் கூறப்படும் தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மோனிக் ஜியானெல்லோனி (Monique Giannelloni) என்ற மசாஜ் நிபுணர் இது குறித்து அளித்துள்ள வாக்குமூலத்தில், அரண்மனை பாதுகாப்பு சோதனைகள் எதையும் சந்திக்காமல் தான் எளிதாக உள்ளே சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தான் வழங்கிய சேவைக்காக £75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதற்கு அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வமான Coutts bank காசோலை (Cheque) வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் மூலமாகவே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக மோனிக் தெரிவித்துள்ளார். அரண்மனைக்குள் ஒரு வெளிநபர் இவ்வளவு எளிதாக நுழைந்து, அங்கே நிர்வாண மசாஜ் (Naked Massage) செய்துகொண்ட சம்பவம், அப்போது இருந்த பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட Epstein files ஆவணங்களில், ஆண்ட்ரூ மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்புகள் குறித்த பல திடுக்கிடும் மின்னஞ்சல்களும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தொடர் புகார்களின் பின்னணியில், 2026 பிப்ரவரி மாத இறுதியில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் 'Misconduct in Public Office' என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அரசர் சார்லஸ் ஏற்கனவே ஆண்ட்ரூவின் அனைத்து அரச பதவிகளையும் பறித்துள்ள நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த Buckingham Palace தொடர்பான பழைய புகார்கள் அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைக்கத் தயார் என அரண்மனை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.