அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதுமே சீனா, கனடா என வரிசையாக வரி போட்டு மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவையும் சும்மா விடவில்லை. "நீங்க ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, அவர்கள் போர் செய்ய மறைமுகமாக உதவுகிறீர்கள்" என ஒரு 'செக்' வைத்து, இந்தியாவுக்கான வரியை எகிற வைத்தார். ஒரு பக்கம் மோடி ஜி 'நார்த் ஈஸ்ட்' மாநிலங்களை கவனித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் டிரம்ப் போட்ட இந்த வரி பாசக்கயிறு இந்திய வர்த்தகத்தை கொஞ்சம் திணறடித்துதான் வைத்திருந்தது.
ஆனால், டிரம்பிற்கு ஒரு போன் போட்டுப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது! இன்று இரவு மோடியுடன் போனில் பேசிய டிரம்ப், இந்தியாவின் "மாஸ்டர் பிளான்" படி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி சம்மதித்ததை அடுத்து அப்படியே குளிர்ந்து போய்விட்டார். "ரஷ்யா வேணாம், வெனிசுலா ஓகே" என இந்தியா இறங்கி வந்ததால், பதிலுக்கு டிரம்ப் தனது 'டேக்ஸ்' கத்திரிக்கோலை எடுத்து, இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து தடாலடியாக 18 சதவீதமாகக் குறைத்துவிட்டார்.
இந்த டீலில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் உண்டு. இந்தியா அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கப் போகிறதாம். "நாங்கள் வரியை 18-க்கு குறைத்துவிட்டோம், நீங்க அப்படியே அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 'ஜீரோ' ஆக்கிவிடுங்கள்" என டிரம்ப் ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
மொத்தத்தில், ரஷ்யாவுக்கு கட் கொடுத்துவிட்டு, வெனிசுலாவிடம் கைகோர்த்து, அமெரிக்காவோடு வரி குறைப்பு விளையாட்டில் இந்தியா காய் நகர்த்தியிருப்பது சர்வதேச அரசியலில் ஒரு 'காமெடி த்ரில்லர்' போல வைரலாகி வருகிறது!
