GO BACK

கிடு நடுங்கிப் போன TRUMP: "நான் அந்த தீவுக்கு போனதே இல்லை" என்று சத்தியம் !

எங்கப்பன் புதருக்குள்ள இல்ல என்பது போல , "சத்தியமா நான் அந்த செக்ஸ் தீவுக்கு போனதே இல்லை" என்று ரம் , மிகவும் பதற்றத்துடன் தெரிவித்துள்ள விடையம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 

அமெரிக்காவுல இப்போ எப்ஸ்டீன் (Epstein) பைல்ஸ் ரிலீஸ் ஆகி ஒரே களேபரமா இருக்கு. "ஏண்டா, அந்த ஆள் கூட போட்டோ எடுத்துக்கிட்டீங்க?"ன்னு எல்லாரும் கேக்க, நம்ம டொனால்ட் டிரம்ப் இப்போ செம காண்டுல இருக்காரு. "யோவ், நான் அந்தத் தீவுக்கே போனது இல்லப்பா!"ன்னு ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்துல கதறிட்டு இருக்காரு. குறிப்பா, கிராமி அவார்ட்ஸ் ஃபங்ஷன்ல ட்ரெவர் நோவா (Trevor Noah) இவரைப் பத்தி ஒரு கிண்டல் ஜோக் அடிச்சுப்புட்டாரு. அவ்வளவுதான், "உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்"னு டிரம்ப் இப்போ கோர்ட் நோட்டீஸை தூக்கிட்டு அலையுறாரு.

விஷயம் என்னன்னா, மைக்கேல் வுல்ஃப் (Michael Wolff) அப்படிங்கிற ஒரு எழுத்தாளர் மேலதான் டிரம்ப்புக்கு செம கோவம். "இந்த ஆளு எப்ஸ்டீன் கூட சேர்ந்து என்னைத் தீர்த்துக்கட்டப் பார்க்குறான்"னு டிரம்ப் புதுசா ஒரு தியரியை கிளப்பி விட்டிருக்காரு. "வொயிட் ஹவுஸை விட்டு என்னை அனுப்ப இவங்கெல்லாம் ப்ளான் போட்டாங்க, அதான் இந்த எப்ஸ்டீன் ஆவணங்கள்ல என்னைப் பத்தி தப்பு தப்பா எழுதி வச்சிருக்காங்க"ன்னு அனல் பறக்கப் பேசுறாரு. ஊர்ல இருக்கிற எல்லா டெமாக்ரட்ஸ் (Democrats) ஆளுங்களும் அந்தத் தீவுக்குப் போயிருக்காங்க, ஆனா நான் மட்டும் போகவே இல்லைன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லிட்டு இருக்காரு.

"எப்ஸ்டீன் கூட நான் பிரண்டே கிடையாது, அவன் ஒரு லூசு, இந்த ரைட்டர் ஒரு கேடு கெட்டவன்"னு டிரம்ப் அவரோட ஸ்டைல்ல திட்டாத குறையா போஸ்ட் போடுறாரு. "2016 எலக்ஷன் அப்போவே இந்த வுல்ஃப் என்னை கவிழ்க்கப் பார்த்தான், இப்போ எப்ஸ்டீன் கூட சேர்ந்து கைகோர்க்கிறான்"னு டிரம்ப் புலம்புறதைப் பார்த்தா, அங்க இருக்கிற ஆளுங்களுக்கே சிரிப்பு வருது. "எந்தச் சந்துல போனாலும் என் பேரை இழுக்கிறதே இவங்களுக்கு வேலையா போச்சு"ன்னு டிரம்ப் இப்போ டென்ஷன்ல உச்சத்துல இருக்காரு.

முக்கியமா, "நான் இப்போ கேஸ் போடப்போறேன், யாரையும் விடமாட்டேன்"னு டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்காரு. Trevor Noah அடிச்ச அந்த சின்ன ஜோக்குக்கு, "அவன் யாருன்னே எனக்குத் தெரியாது, அவன் ஒரு வேஸ்ட்"னு டிரம்ப் குதிச்ச குதி இருக்கே, அதுதான் இப்போ சோஷியல் மீடியாவுல செம வைரல். மொத்தத்துல, "எப்ஸ்டீன் தீவுல ஈ கூட ஆடலை, நான் அங்க கால் கூட வைக்கல"ன்னு டிரம்ப் இப்போ கோர்ட் படி ஏறத் தயாரா இருக்காரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்கப்போகுதுன்னு அங்க இருக்கிற எல்லாருமே வேடிக்கை பார்க்கக் காத்துட்டு இருக்காங்க.