புலனாய்வு பத்திரிகையாளர் ஜெர்மி கோர்பெல் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், அந்த வினோத விண்கலம் முதலில் வானில் மிதந்து கொண்டிருப்பதை ட்ரோன் கேமரா துல்லியமாக 'லாக்' செய்கிறது. ஆனால், தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பதை உணர்ந்த அடுத்த நொடியே, அந்த மர்மப் பொருள் எதிர்பாராத விதமாக அங்குமிங்குமாக அசைந்து கேமராவின் பிடியிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ஒரு கட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில், ஒளியின் வேகத்திற்கு இணையாக அந்த விண்கலம் சீறிப்பாய்ந்து மறைந்த காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதுவரைக்கும் வேற்று கிரகவாசிகள் அல்லது UFO-க்கள் பற்றி எந்த ஆதாரமும் இல்லை என்று மழுப்பி வந்த அமெரிக்க ராணுவத்தின் (Pentagon) 'ரகசிய பெட்டகத்தில்' இருந்து இந்த வீடியோ கசிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாகச் சொன்னால், ஒரு பொருள் திடீரென அசைவற்று இருந்துவிட்டு மறுநொடியே சூப்பர்சோனிக் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் மறைவது சாத்தியமே இல்லை. இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே கிடையாது என்றும், இது நிச்சயம் 'வேற்று உலகத்துத் தொழில்நுட்பம்' என்றும் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இந்த வீடியோவை 'சுப்பர்சோனிக் தப்பிப்பு' (Supersonic Escape) என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றி பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்த லேட்டஸ்ட் வீடியோ ஆதாரத்துடன் கூடிய தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. விண்ணில் பறக்கும் இந்த வினோதப் பொருட்கள் எங்கே இருந்து வருகின்றன, அவற்றின் நோக்கம் என்ன என்பது இன்னும் விடை தெரியாத மர்மமாகவே நீடிக்கிறது.
