Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

விஜயை வேர் அறுக்க திட்டம்: பள்ளிகளில் விஜய் பாடலுக்கு தடை-பீதியில் திமுக

 

விஜய் என்ற ஆளுமையை இனிமேலாவது வளரவிடக் கூடாது என்பதில் திமுக அரசு ரொம்பவே 'கண்ணும் கருத்துமாக' இருக்கிறது போல. பள்ளிகளில் நடக்கும் விசேஷங்களில் விஜய் பாடல்களைப் போடக்கூடாது என்று ஒரு புது ‘ஆர்டர்’ ரகசியமாகப் பறந்திருக்கிறதாம். இது ஏதோ நேத்து இன்னைக்கு வந்த கதை இல்லை, கடந்த ரெண்டு வருஷமாகவே இந்த 'கதகளி' ஓடிக்கிட்டு இருக்கிறதா பேச்சு கிளம்பியுள்ளது. வருடாந்திர விழாக்கள்ல பசங்க குத்தாட்டம் போட விஜய் பாட்டு தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ். அதை கட் பண்ணி, பசங்க மனசுல தளபதி மாஸை முளையிலேயே கிள்ளி எறியப் பார்க்குறாங்களாம்.

"இனிமே விஜய் அண்ணன் படம் நடிக்கப்போறது இல்லை... அதனால வளர்ந்து வர்ற குட்டீஸ்களோட ஹார்ட்டுல அவர் இருக்கக்கூடாது" என திமுக போட்ட கணக்கு இது என அரசியல் வட்டாரத்துல நக்கல் அடிக்கிறாங்க. என்னா ஒரு தீர்க்கதரிசனம்! அடுத்த 50 வருஷத்துக்கான மாஸ்டர் பிளான்ல இதுவும் ஒண்ணா இருக்கும் போல. "பள்ளிக்கூடத்துல விஜய் பாட்டு போடக்கூடாதுன்னா, உதயநிதி சார் பாட்டு போட்டா மட்டும் விட்ருவாங்களா?" என ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது சேனலில் வச்சு செஞ்சிருக்காரு. அவர் திமுக அரசை இந்த விஷயத்துல பயங்கரமா 'ரோஸ்ட்' பண்ணியிருக்காரு.

எது எப்படியோ, விஜய்யைப் பார்த்தாலே திமுக-வுக்கு ‘லைட்டா’ நடுக்கம் வந்துடுச்சுங்கிறது தான் ஊருக்கே தெரிஞ்ச மேட்டர். "75 வருஷப் பாரம்பரியக் கட்சி"ன்னு காலரைத் தூக்கிவிட்டாலும், வர்ற ஏப்ரல் தேர்தலை நினைச்சா அவங்களுக்கு ‘திக்குமுக்கு’ ஆகுது. எடுத்த சர்வே எல்லாம் திமுக-வுக்கு 'பேக் ஃபயர்' (Backfire) ஆகுற மாதிரி ரிசல்ட் தர்றதால, இப்போ இப்படி இறங்கிப் போய் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, "பாட்டு போடக்கூடாது"ன்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் 'ஓவர்' தான் பாஸ்!

இந்த விஷயம் இப்படியே போனா, நாளைக்கு பசங்க ஸ்கூல்ல 'விசில்' அடிக்கக் கூடாதுன்னு கூட சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. தளபதி மேல இருக்கிற பயம் அப்படி!

Share this news: Back to Home