GO BACK

அலி கமேனியின் ரகசிய சந்திப்பை CIA-க்கு சொன்னது யார் ? சட்டென புறப்பட்ட அமெரிக்க விமானங்கள் இதில் இந்தியாவின் பங்கு என்ன

இந்த பேச்சுவார்த்தை எல்லாமே அமெரிக்காவின் கபட நாடகம் தான். ஈரானின் உச்ச தலைவரான அலி கமேனியை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டம், சுமார் 9 மாதங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. இந்த ஆப்பரேஷனுக்கு "Operation Epic Fury" என்று பெயரிடப்பட்டது.

அமெரிக்காவின் பெரும் படை, ஈரானுக்கு அருகே சென்று பல நாட்களாக நிலை கொண்டு இருந்தபோது, தாக்குதல் எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம் என்ற சூழல் காணப்பட்டது. இதனால் தலைவர் அலி கமேனி அவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்கி இருந்தார். அவர் இருந்த இடத்தை இரண்டு முறை கண்டறிந்தும் அமெரிக்காவால் அங்கே தாக்குதல் நடத்த முடியவில்லை. காரணம், அது மலைகளுக்கு நடுவே குடையப்பட்ட குகை. அணு குண்டைத் தவிர வேறு எந்த ஒரு குண்டாலும் அந்த மலையை அழிக்க முடியாது.

இந்த நிலையில் தான் அமெரிக்கா தனது கபட நாடகத்தை ஆரம்பித்தது. அது என்னவென்றால், "சமாதான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், பேசி ஒரு முடிவுக்கு வரலாம்" என்று ஈரானை அமெரிக்கா அழைத்தது. இதன் பின்னாலிருக்கும் சூழ்ச்சியை அறியாமல் ஈரான் பேச்சுவார்த்தைக்குச் சென்றுள்ளது. முதலில் பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை அடைவது போலவும், சில விஷயங்களுக்கு ஒப்புக் கொண்டால் தமது படைகளை விலக்கிக் கொள்வோம் என்றும் அமெரிக்கா நாடகமாடியது.

இதனால் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரானின் முக்கிய தலைவர்கள் நாடு திரும்பிய உடனே, அலி கமேனியைச் சந்தித்து என்ன நடந்தது என்பது தொடர்பாகப் பேச ஆரம்பித்தார்கள். அங்கே தான் அவர்கள் பெரும் பிழையை விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு, அலி கமேனி இருக்கும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தது. இதேவேளை, முக்கிய சந்திப்புகள் இடம்பெறும் இடங்களில் உள்ள சிலரை ஏற்கனவே பெரும் தொகைப் பணம் கொடுத்து அமெரிக்கா விலைக்கு வாங்கியிருந்தது. நேற்று முன்தினம், தலைவர் கமேனி ஒரு முக்கிய ரகசிய சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். மிகவும் குறைவான அதிகாரிகளே இதில் கலந்துகொண்டனர். ஆனால், இந்த சந்திப்பு எங்கே நடக்கிறது, எத்தனை மணிக்கு நடக்கிறது என்ற துல்லியமான தகவலை அந்த உளவாளி அமெரிக்காவுக்குப் பரிமாறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திடீரென மிக வித்தியாசமாக நடந்துகொண்ட அமெரிக்கா, பேச்சுவார்த்தை மேசையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகளை விதித்தது. இதனை உடனே ஈரான் அதிகாரிகள் நிராகரித்தார்கள். இதைத்தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. உடனே, "பேச்சுவார்த்தை முறிவடைந்தது" என்ற தகவலை அமெரிக்கா ஊடகங்களுக்கு வழங்க, அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்து முடிந்தது. அதாவது, பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், சமாதானமாகச் செல்லலாம் என்று கூறிவிட்டு இறுதியில் கழுத்தை அறுத்துள்ளது அமெரிக்கா. அவ்வளவுதான் விஷயம்!

ஈரான் விட்ட ஒரே தவறு:

அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்கப் படைகள் சென்றபோது, வெனிசுலா நாட்டில் உள்ள அனைத்து ராடார்களும் (Radars) செயலலிழந்தன. அது போலவே ஈரானிலும், கமேனி இருந்த கட்டடத்தை அமெரிக்க விமானங்கள் தாக்குவதற்கு சுமார் 25 நிமிடங்களுக்கு முன்னரே பல ராடார்கள் செயலிழந்துவிட்டன. அதனை அவர்கள் சரியாகச் சிந்தித்து இருந்தால், கமேனி அவர்கள் உயிர் தப்பி இருப்பார். இதுமட்டுமல்லாமல், ஈரானின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து இருந்தது. இதற்கு இந்தியாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளார் ட்ரம்ப். இந்தியா தற்போது சில அமெரிக்க ஆதரவு பெற்ற தலிபான் குழுக்களுக்கு, பாகிஸ்தான் குறித்த ரகசிய தகவல்களைக் கொடுத்துள்ளது. இதனால் தலிபான்கள் பாகிஸ்தானின் சில நிலைகளைத் தாக்க, பதிலுக்குப் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று தாக்க, பாகிஸ்தானின் கவனம் ஆப்கான் பக்கம் திசை திரும்பியது. இதனால் அமெரிக்கா தனது வேலையை மிக மிகச் சுலபமாக முடித்துவிட்டது. இல்லையென்றால், கமேனி பாகிஸ்தானுக்கு அருகே இருக்கும் ஒரு நகருக்குள் வந்திருந்தால், அமெரிக்கப் படைகளால் தாக்கி இருக்கவே முடியாது. மேலும் பாகிஸ்தான், பல ரகசிய தகவல்களை கமேனிக்குக் கொடுத்திருக்கும். ஆனால், அவை எதுவுமே நடக்காமல் தடுத்ததில் இந்தியாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.