Ads Top

பிரிட்டன் தளங்களை துல்லியமாக தாக்கும் ஈரான்: புட்டின் கை வரிசை ஆரம் என்கிறார் PM- ஸ்டாமர்


 ஈராக்கில் உள்ள பிரித்தானிய ராணுவத் தளம் நோக்கி, நேற்று (12) வந்த ஈரானிய ட்ரோன்களைப் பிரிட்டிஷ் படை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் தளம் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறித்த தளம் ஈராக்கில் எவருக்கும் தெரியாத ஒரு மறைவிடத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஈராக்கின் பாலைவனப் பகுதியில், நிலத்திற்கு அடியில் இந்த முகாமைப் பிரித்தானியா அமைத்துள்ளது.


இந்த விபரங்களைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ரஷ்யா, தனது உளவுச் செயற்கைக்கோள் (Spy Satellite) உதவியை ஈரானுக்கு வழங்கியுள்ளது. இதனால் ஈரான் அனுப்பும் ஆளில்லாத் தாக்குதல் விமானங்கள், ரஷ்ய நாட்டுச் செயற்கைக்கோளைப் பயன்படுத்தித் தனது தாக்குதல் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிகின்றன. இதனால்தான் கடந்த சில நாட்களாக ஈரான், அமெரிக்க சி.ஐ.ஏ (CIA) தளங்கள் மற்றும் ராணுவத் தளங்களை இலகுவாகக் கண்டறிந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


பிரித்தானிய தளம் நோக்கி வந்த ட்ரோன்கள் தொடர்பாகப் பிரித்தானியா பெரும் கவனம் செலுத்தியுள்ளது. இது ரஷ்ய அதிபர் புதினின் மேற்பார்வையில் நடத்தப்படும் தாக்குதல் என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் நேற்று தெரிவித்துள்ளார். இந்தப் போரை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும், இதனைச் சாக்காக வைத்து நேட்டோ நாடுகள் மற்றும் அமெரிக்காவைத் தாக்க ரஷ்யா ஈரானைப் பயன்படுத்துவதாகவும் கியர் ஸ்டார்மர் குற்றம் சுமத்தியுள்ளார்.


சுமார் 2 நாட்களில் போர் முடிந்துவிடும் என்று கருதிய அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளின் சூழலே முக்கியக் காரணமாகும். அதிலும் துபாய் நாட்டிற்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவே அச்சப்படுகின்றனர். உலகின் மிக முக்கிய விமான நிலையமான துபாய் விமான நிலையம் பலமுறை மூடப்பட்டதால், அந்நாட்டு அரசுக்குப் பெரும் நிதி இழப்புடன் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.