இலங்கையில் புலிகளுடனான உச்சக்கட்டப் போரின் போது, பல வெளிநாடுகள் கொடுக்கத் தயங்கிய மல்டி-பரல் ஏவுகணைகளை ஈரான் இலங்கை ராணுவத்திற்கு வழங்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஈரானின் தலைவர் அலி கமேனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு எந்த அளவு நெருக்கமாக இருந்தார் என்ற சில விவரங்களை ஐரோப்பியச் செய்திச் சேவைகள் கசியவிட்டுள்ளன.
2009-ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற வேளை, இலங்கை ராணுவம் மல்டி-பரல் ராக்கெட் லோஞ்சர்களைக் (MBRL) கடுமையாகப் பயன்படுத்தியது. மக்கள் செறிவாக இருந்த இடங்களைக் கூட அது விட்டுவைக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது இந்த மல்டி-பரல் ராக்கெட் லோஞ்சர் தாக்குதல்தான். இதனை 2007-ஆம் ஆண்டு ஈரான் இலங்கைக்கு வழங்கியதோடு, இலங்கை ராணுவத்தைத் தெஹ்ரானுக்கு அழைத்து, அதனை இயக்கவும் மற்றும் கொரில்லா தாக்குதலை முறியடிக்கவும் பயிற்சிகளை வழங்கியது. இதனை ஏற்பாடு செய்தவர் வேறு யாருமல்ல, அலி கமேனிதான்.
இலங்கை ராணுவத்திற்கு மல்டி-பரல் ராக்கெட் லோஞ்சர்களைக் கொடுத்தால் ஒரு மனிதப் பேரவலம் வரும் என்று முன்கூட்டியே கருதிய பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த ஆயுதத்தை இலங்கைக்கு வழங்கவில்லை. ஆனால், ஈரான் இதனை வழங்கியது மட்டுமன்றி, தவணை முறையில் பணத்தைச் செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் அதற்கான குண்டுகளையும் கொடுத்து இலங்கை அரசுக்கு உதவியுள்ளது. அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனி தொடர்பாகத் தமிழர்கள் மத்தியில் பல எதிர்மறையான விமர்சனங்கள் உண்டு.
இது போன்ற செய்திகள் வெளியாகிய பின்னர், அதனை மீண்டும் ஆய்வு செய்வது நல்லது. அதுமட்டுமல்ல, ஈரான் இலங்கைக்கு 2007-ஆம் ஆண்டு முதல் தவணை முறையில் பணம் செலுத்தினால் போதும் என்ற அடிப்படையில் கச்சா எண்ணெயை வழங்கியுள்ளது; இலங்கை ராணுவத்திற்குத் தெஹ்ரானில் பயிற்சி அளித்துள்ளது. இதுபோக மிக மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் ஏராளமான பணத்தையும் கொடுத்துள்ளது. பல ஆயுதங்களையும் அள்ளி வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் இறந்து போக, கமேனி மிக முக்கியமான ஒரு காரணி என்பது மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்! மரணித்த ஈழத் தமிழர்களின் ஆன்மாக்கள் விட்ட சாபம், தமிழனை அழிக்க நினைத்த பாவம்; இதுவும் அவர் அழிவுக்கு ஒரு காரணம்.
அதிர்வுக்காக கண்ணன்

