Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

வெற்றி என்று அறிவித்து நைசாகப் போரை முடிக்க ட்ரம்ப் திட்டம் - கதறும் உலக நாடுகள்!

யாரையும் கேட்காமல் இஸ்ரேலைச் சாந்தப்படுத்தவும், தான் சிக்கியிருந்த எப்ஸ்டீன் விவகாரத்திலிருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பவுமே ஈரான் மீது போரைத் தொடங்கினார் ட்ரம்ப். இதுவரை 6,000 இலக்குகளைத் தாம் தாக்கி அழித்துள்ளதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தனது தாக்குதலை நிறுத்தவே இல்லை. சொல்லப்போனால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகில் உள்ள பல நாடுகள் பெரும் தாக்கமடைந்துள்ளன. இதனால் எந்த ஒரு நாடும் அமெரிக்காவுக்கு உதவத் தயாராக இல்லை.

இந்தியாவுக்கு மட்டும் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; துபாய்க்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர்கள் என்ற விகிதத்தில் இழப்பு ஏற்படுகிறது. இப்படிப் பல நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், ட்ரம்ப்பால் மேற்கொண்டு போரை நீடிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. போரை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றாலும், உடனடியாக அதைச் செய்யவும் முடியாது. எனவே, இன்னும் ஒரு வார காலம் போரைத் தொடர்ந்துவிட்டு, பின்னர் தாம் பெரும் வெற்றியடைந்ததாகக் கூறி கப்பற்படையை விலக்கிக்கொள்ள ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கச் செய்தி நிறுவனங்களே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது மத்திய கிழக்கு நாடுகள் தான். உலகில் உள்ள பல நாடுகளில் எரிபொருள் விலை எகிறியுள்ள நிலையில், பிரித்தானியாவில் மருந்து தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈரானுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. "எங்கள் கப்பல்களை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று ஐரோப்பிய நாடுகள் ஈரானிடம் கேட்டு வருகின்றன. இதனை ஏற்கனவே இந்தியா செய்து காட்டிவிட்டது.

ஏனைய உலக நாடுகள் ஈரானுடன் சமாதானமாகப் போவது என்ற நிலைப்பாட்டை எடுக்க, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது தனித்து விடப்பட்டுள்ளன. போரைத் தொடர்ந்து நடத்தப் பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும். இதனை விட இஸ்ரேலிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. ஈரான் அனுப்பும் சாதாரண ட்ரோன்களைக் கூட 1 லட்சம் டாலர் பெறுமதியான ஏவுகணையால் தான் சுட்டு வீழ்த்த வேண்டியிருக்கிறது. இந்நிலையில் ட்ரம்ப் நைசாக நழுவி, போரை இன்னும் 7 முதல் 10 நாட்களில் முடித்துவிடுவார் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Share this news: Back to Home