கச்சா எண்ணை வேண்டுமா போர் கப்பலை அனுப்புங்க- ரம் சொல்லும் புது கணக்கு

உங்கள் நாட்டுக்கு கச்சா எண்ணெய் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமானால், உடனே உங்கள் நாட்டு போர் கப்பலை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்புங்க, என்கிறார் ரம். அட போரை நாங்களா ஆரம்பித்தோம் ? நீங்க தானே ஆரம்பித்தீர்கள். இப்பொழுது ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியாமல் ஏன் திண்டாடுகிறீர்கள் என்று உலக நாடுகள் கேட்கிறது. சுமா இருந்த ஓணானை எடுத்து , வேட்டிக்கு உள்ளே விட்ட கதை தான் இது.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்போ வேற லெவல் மோடுக்கு வந்துட்டாருப்பா! "நானும் என் ஆளு இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை பிரிச்சு மேஞ்சுட்டோம், அவங்க மிலிட்டரி இப்போ காலி" அப்படின்னு ஒரு பக்கம் அடிச்சு விடுறாரு. ஆனா அந்த ஈரான் சும்மா இல்லாம, ஹார்முஸ் ஜலசந்தியை மூடிட்டு, "இந்த வழியா கப்பல் வந்தா கடலுக்குள்ள சமாதிதான்"னு மிரட்டுது. இதைக் கேட்டதும் நம்ம ட்ரம்ப் மாமாவுக்கு லைட்டா பிதிங்கிருச்சு போல! உடனே சோசியல் மீடியால வந்து, "ஏலேய் சீனா, ஜப்பான், பிரான்ஸ், லண்டன்... உங்களுக்கு பெட்ரோல், டீசல் வேணும்ல? அப்புறம் ஏன்டா இங்க நான் மட்டும் தனியா நின்னு மொரட்டு அடி வாங்கிட்டு இருக்கேன்? உங்ககிட்ட இருக்கிற போர்க்கப்பலை எல்லாம் உடனே இங்க அனுப்பி வைங்க"ன்னு ஒரு குத்துப்பாட்டே பாடிட்டாரு.

"ஈரான் ராணுவத்தை 100% தட்டி விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க, ஆனா இந்த ஈரான் பய புள்ளைங்க இருக்காங்களே... அவங்க தோத்துப்போய் ஓரமா உட்கார்ந்திருந்தாலும், திடீர்னு எங்கிருந்தாவது ஒரு ட்ரோனையோ இல்ல ஒரு சின்ன ஏவுகணையையோ அனுப்பி வச்சு நம்ம கப்பலை காலி பண்ணிடுவாங்க. இது அவங்களுக்கு ரொம்ப ஈஸி"ன்னு ட்ரம்ப் ஒரு பிட்டை போடுறாரு. "ஒரே ஒரு கண்ணிவெடியை தண்ணிக்குள்ள போட்டு வச்சாலும் நம்ம சீன் முடிஞ்சிரும், அப்புறம் உலகத்துக்கே கச்சா எண்ணெய் வராம கடையை சாத்த வேண்டியதுதான். அதனால ரிலாக்ஸா இருக்காம எல்லாரும் உங்க கப்பலை எடுத்துட்டு கிளம்பி வாங்கடா"ன்னு ஊர் ஊரா கூவிக் கூவி கூப்பிடுறாரு நம்ம மாமா.

கடைசியா ஈரான் கடலோரப் பகுதியில குண்டு மழை பொழியப்போறோம், அவங்க படகை எல்லாம் சுட்டுத் தள்ளப்போறோம்னு ஒரு கெத்தான எச்சரிக்கையையும் கொடுத்துட்டாரு. "உலக நாடுகளே, உங்களுக்கு எண்ணெய் வேணும்னா அமெரிக்கா கூட சேர்ந்து உங்க கப்பலையும் இங்க காவலுக்குப் போடுங்க, இல்லைன்னா எல்லாரும் சைக்கிள்ல தான் போகணும்"னு மறைமுகமா மெசேஜ் சொல்லிட்டாரு. மொத்தத்துல "வேணும்னா வா... கப்பலை அனுப்பி வச்சு எண்ணெயை எடுத்துக்கோ"ன்னு ட்ரம்ப் இப்போ உலக நாடுகளுக்கு ஒரு ஓபன் சேலஞ்சே விட்டுருக்காரு. எது எப்படியோ, அடுத்த சில நாள்ல அந்த ஜலசந்தி வழியா டிராபிக் ஜாம் ஆகுற அளவுக்குப் போர்க்கப்பல் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!

Previous Post Next Post

Contact Form