Posted in

ஸ்பெயினின் சியூட்டாவில் மீண்டும் புதிய படையெடுப்புக்குத் திட்டம் – தீவிரவாதிகள் குறித்த எச்சரிக்கையால் ஐரோப்பாவில் பதற்றம்!

ஸ்பெயின்: வட ஆப்பிரிக்கக் கரையில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் எல்லைப் பகுதியான சியூட்டா (Ceuta) நகருக்குள் ஒரே நாளில் சுமார் 60,000 மொராக்கோ அகதிகள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் திடீரென ஊடுருவிய சம்பவம் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு கடல் வழியிலும், தடுப்புச் சுவர்கள் வழியிலும் ஒரே நேரத்தில் திரளான மக்கள் திரண்டு வந்ததால் சியூட்டா நகரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்தத் திடீர் ஊடுருவலின் போது நேரிட்ட எதிர்பாராத விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களில் குறைந்தது 57-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊடுருவியவர்களில் சுமார் 90 சதவீதத்தினர் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி மீண்டும் மொராக்கோவிற்கே திரும்ப அனுப்பப்பட்டாலும், ‘மீண்டும் சியூட்டாவைக் கைப்பற்ற இரண்டாவது கட்ட படையெடுப்பை நடத்துவோம்’ என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே, இந்த லட்சக்கணக்கான அகதிகள் கூட்டத்தைப் பயன்படுத்தித் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த நச்சு நபர்களும், குற்றவாளிகளும் சியூட்டா எல்லைக்குள் ஊடுருவியிருக்கக் கூடும் என்ற பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. சியூட்டா பகுதிக்கு ‘ஷெங்கன் மண்டலம்’ (Schengen Zone) மூலமாக ஐரோப்பியக் கண்டத்தின் பிரதான நிலப்பரப்பிற்குச் செல்லும் வசதி இல்லை என்றாலும், எல்லையில் நிலவும் இந்த அராஜகச் சூழல் ஐரோப்பிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது என வலதுசாரித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலைமை கைமீறிச் சென்றதைத் தொடர்ந்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் சியூட்டாவிற்கு இராணுவப் படைகளை அனுப்பி எல்லையைத் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி வருகின்றன. சியூட்டா எல்லையில் மிதக்கும் பிரம்மாண்டத் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.