அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வரும் பிரிட்டனின் ‘ஆரெஃப் பேர்போர்ட்’ (RAF Fairford) ராணுவ விமானப்படை தளத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக 5 பேரை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரிட்டனின் க்ளௌசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஆரெஃப் பேர்போர்ட் தளத்தை நோக்கி நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த மூன்று வெள்ளை நிற வேன்களை ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் வழியனுப்பி மறித்தனர். அதனைத் தொடர்ந்து வேன்களில் வந்த 5 பேரையும் வெடிபொருள் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டப் பிரிவு 5-ன் கீழ் ‘பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக’ சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், தளத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 வேன்களையும் ராணுவத்தின் வெடிபொருள் தடுப்பு பிரிவினர் (Bomb Disposal Squad) ரோபோக்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 400 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு, 85-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் பி-52 மற்றும் பி-1 குண்டுவீச்சு விமானங்கள் இந்த ‘ஆரெஃப் பேர்போர்ட்’ தளத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன. இதனால் இத்தளத்தை இலக்காக வைத்து அணுசரனை அல்லது எதிரி நாட்டு உளவு அமைப்புகளின் பின்னணியில் இந்த தாக்குதல் சதி நடத்தப்பட்டிருக்கலாம் என லண்டன் மெட்ரோபொலிட்டன் பயங்கரவாத தடுப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.