Posted in

தனுஷ் வழங்கிய காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்: அரசியல் வருகை குறித்து இணையத்தில் விவாதம்!

நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் சென்னை செம்மஞ்சேரியில் பிரம்மாண்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு நற்பணி இயக்கம் சார்பில் வெள்ளி காமாட்சி விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. இதில் வழங்கப்பட்ட விளக்குகளின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி அரசியல் ரீதியான விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தைத் ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்து புதிய கொடி மற்றும் லோகோவை தனுஷ் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், மகளிர் அணி கூட்டத்தில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டிருப்பது பாஜகவுடனான அவரது அரசியல் என்ட்ரிக்கான சிக்னலா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், பாரம்பரிய காமாட்சி விளக்குகளில் இயல்பாகவே தாமரை வடிவங்கள் செதுக்கப்படுவது வழக்கம் என்பதால் இதைக் தேவையின்றி அரசியலாக்கக் கூடாது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷ் அல்லது அவரது நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தனது அரசியல் பிரவேசம் குறித்து தனுஷ் மௌனம் காத்து வரும் நிலையில், இச்சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.