Posted in

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் நாட்டின் டுனிப்ரோ (Dnipro) நகரில் அமைந்துள்ள பிரதான ரயில் நிலைய மேடையில் ரஷ்யப் படைகள் ஜெட் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. டுனிப்ரோவிலிருந்து ஜபோரிஜியா (Zaporizhzhia) செல்லத் தயார் நிலையில் இருந்த பயணிகள் ரயில் நின்றிருந்த பிளாட்பாரத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இச்சம்பவத்தைக் “கொடூரமானது” எனக் கண்டித்துள்ளார். மேலும், ரஷ்யப் போரைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைக் குறைக்கக் கூடாது என்றும் சர்வதேச சமூகத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் இந்தத் தாக்குதலுக்குத் தங்கள் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்த இடத்தில் உக்ரைன் மீட்புக் குழுவினரும் மருத்துவப் பணியாளர்களும் அவசர உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் அஞ்சப்படுகிறது.