கடந்த ஆட்சிக் காலத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட மொத்தம் 600 வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின்போது விவசாய சங்கத்தினர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், உரிய சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில், இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது கைவிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் காரணமாகப் பாதிக்கப்பட்டு வந்த 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையானது போராட்டத்தில் ஈடுபட்டு மீதான வழக்குகளைச் சந்தித்து வந்த விவசாயிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எழுப்பப்பட்ட தீர்வாகப் பார்க்கப்படுகிறது.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் இந்த அதிரடி முடிவின் மூலம் ஆயிரக்கணக்கானோர் சட்டச்சிக்கல்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.