நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மும்பை வீட்டில் மனித உருவத்திலான மேனிகுயின் பொம்மை ஒன்று தானாகவே இடமாறிய விசித்திர அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நேஹா துபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை வீடு இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தாலும், தனது மும்பை வீட்டில் ஏதோ விசித்திரமான ஆற்றல் இருப்பதாக உணர்ந்ததாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார். தன் கையில் இருந்த ஒரு உடம்பை மாட்டிக்கொள்ள முடியாத மேலாடையைப் போடுவதற்காக மனித அளவுள்ள மேனிகுயின் பொம்மை ஒன்றை வாங்கி, அதற்கு ‘பியோனா’ என்று பெயரிட்டு வைத்திருந்ததாகக் கூறினார். தன் வீட்டிற்கு வரும் நண்பர்கள் அந்தப் பொம்மையைப் பார்த்து இயல்பாக வணக்கம் தெரிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்தப் பொம்மை யாருடைய உதவியும் இல்லாமல் தனது இருப்பிடத்தையும் நிலையையும் தானாகவே மாற்றிக்கொண்டே இருந்ததை அவர் கவனித்தார். இதனால் உறைந்துபோன அவர், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அதனை வீட்டை விட்டு அகற்ற முடிவு செய்தார். 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஐ ஆம் லெஜண்ட்’ திரைப்படத்தில் வருவது போல இந்தப் பொம்மை தானாக நகர்ந்தது தமக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆன்மீக ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், ஹனுமான் சாலிசா பாடலை ஒலிக்கவிட்டு, கையில் உப்புடன் அந்தப் பொம்சையை உடைத்துத் துண்டுகளாகப் பிரித்தெடுத்தார். மேலும் வீட்டைச் சுத்தம் செய்து பாதுகாத்த பிறகு தற்போது தனது வீடு அமைதியாக இருப்பதாக அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.