Posted in

வாக்கு இயந்திரத்தில் “விசில்” சின்ன பட்டன் ஜேம் ஆகி விட்டது – அந்த அளவு குத்தி இருக்கிறார்கள்!

📅 வெளியானது: April 24, 2026

நேற்று நடைபெற்ற தேர்தலில் பல Incidents நடந்துள்ளன. அதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல வாக்குச் சாவடிகளில் இருந்த வாக்கு இயந்திரத்தில் (EVM) ‘விசில்’ சின்னத்தில் இருந்த பட்டன் உடைந்தும், சில இடங்களில் Jam ஆகி சரியாக வேலை செய்யாமலும் போயுள்ளதாக, இந்த இயந்திரங்களை Pack செய்யும் போது இதனை நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளார்கள். அந்த அளவு விசில் சின்ன பட்டனை மக்கள் ஒரு அழுத்து அழுத்தி இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, இன்று காலை 7 மணி முதல் அண்ணா அறிவாலயம் சென்ற ஸ்டாலின் அவர்கள், Data Analysts-களை மீண்டும் மீண்டும் அழைத்து, தரவுகளைச் சரிபாருங்கள் என்று கூறி குடைச்சல் கொடுத்துள்ளார். தனது கொளத்தூர் தொகுதியில் ஏன் மக்கள் வாக்குப் போட்ட எண்ணிக்கை அதிகரித்தது என்று அவர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குச் சரியான விடை என்ன என்று தெரிந்துகொள்ள ஸ்டாலின் முனைகிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இதேபோல் அதிமுகவும் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் எப்படி 92% Turnout என்பதுதான் அவர்களின் கவலை. விஜய் கட்சி வேட்பாளரைக் காசு கொடுத்துத் தலைமறைவாக்கிய எடப்பாடி, தற்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார். தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் திடீரென அதிக அளவில் வந்து வாக்குகளைப் போட்டாலே அது ஒரு Danger Sign தான். 90% ஆட்சி மாற்றம் வரும் என்பதன் அறிகுறியே இது.

திமுக பாசறை எந்த அளவு பயத்தில் இருக்கிறது என்றால், முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பிற மாநிலத்தில் இருந்து வந்த Police கையில் இருந்த விசிலைக் கூட மறைத்து வைக்கும்படி கூறி பெரும் பிரச்சனை கிளப்பியிருந்தார். இது போக, நடிகர் தல அஜித் அவர்களிடம் ஒரு நிருபர் ‘மாற்றம் வேண்டுமா?’ என்று கேட்க, ‘ஆம்’ என்று அஜித் கூறினார். ஆனால் உடனே திமுக ஊடகங்கள், அஜித் அவர்கள் மாற்றம் வேண்டாம் என்றே கூறினார் என்று செய்திகளை Manipulate செய்துவிட்டது. இதனை கடுமையாக எதிர்த்து, தான் அப்படிச் சொல்லவில்லை என்று அஜித் அவர்கள் இன்று ஒரு Official Statement வெளியிட்டுள்ளார்.

வரும் 29-ம் தேதி அன்று, தேர்தலில் வாக்களித்த மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட Exit Poll வெளியாக உள்ளது. இருப்பினும் அதுவும் பெரும் குழப்பமான கருத்துக் கணிப்பாகவே இருக்கப்போகிறது. மீண்டும் திமுக ஊதுகுழல்கள் திமுகவே வெல்லும் என அறிவிக்கப் போகிறார்கள். ஆனால் மே 4-ம் தேதி தான் பெரும் Blast ஆக இருக்கப்போகிறது. விஜய் ஆட்சி அமைப்பாரா? என்பது முக்கியமே இல்லை. ஆனால் 10 இடங்களைப் பிடித்தாலே TVK கட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதான். 15 இடங்கள் என்றால் சொல்லவே முடியாத வெற்றி. அதற்கும் மேலே எடுத்தால், ஆட்சி அமைவது உறுதி. காரணம் திமுகவால் இம்முறை 118 Seats-களைக் கைப்பற்றவே முடியாது என்பதுதான் உண்மை நிலை. 10 ஆசனங்களை TVK கைப்பற்றினால் கூட, ஆட்சியைத் தீர்மானிக்கும் Deciding Factor-ஆக அது இருக்கும்.