Posted in

முழு ஐரோப்பாவையும் ரஷ்யா கைப்பற்ற உதவுகிறாரா ட்ரம்ப் ? விழுந்துள்ள பெரும் ஓட்டை

தன் சொந்த நலனுக்காக அதிபர் ட்ரம்ப் எந்த ஒரு முடிவையும் எடுப்பார் என்பது, தற்போது உலகறிந்த விஷயமாகிவிட்டது. ஜெர்மனியில் இருக்கும் 5,000 அமெரிக்கப் படைகளை உடனே வெளியேற ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் எல்லையில் மிக நீண்ட எல்லையைக் கொண்ட நாடு ஜெர்மனி. ரஷ்யா நினைத்தால் எந்த நேரத்திலும் தனது படைகளை அனுப்பி ஊடுருவ முடியும். இதன் காரணமாகவே, அமெரிக்காவின் சுமார் 5,000 படையினர் ஜெர்மனி எல்லைகளைப் பாதுகாத்தும், அந்நாட்டு துருப்புகளுக்குப் பயிற்சிகளையும் கொடுத்து வந்தார்கள்.

ஆனால் ஜெர்மன் அதிபர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஈரான் போரில் யாரும் வெற்றிபெறவில்லை என்று ஒரு கருத்தைக் கூறிவிட்டார். அவ்வளவு தான், “உங்களுக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்” என்று கூறிய ட்ரம்ப், உடனே தனது ராணுவ தளபதிக்கு அதிரடி கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில், ஜெர்மனி எல்லையில் உள்ள 5,000 அமெரிக்கப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. இது ரஷ்யாவைப் பொறுத்தவரை மிக மகிழ்ச்சியான செய்தி. இதனைத்தான் ரஷ்யாவும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளுக்கு இடையே தற்போது பெரும் பிளவு ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணமே டொனால்ட் ட்ரம்ப் தான். 1949-ஆம் ஆண்டு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் கூட்டாக ஒரு பெரும் படையை அமைத்து இன்றுவரை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் வல்லரசுகளைச் சமாளித்து வருகின்றன. கடந்த 77 ஆண்டுகளில் நேட்டோ படைகளுக்குள் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இருந்ததே இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது பாதுகாப்புச் செலவினத்தில் பெரும் பகுதியை நேட்டோ கட்டமைப்புக்கே கொடுத்து வந்தன. ஆனால், எப்போது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆனாரோ, அன்றிலிருந்தே அவர் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். அமெரிக்கா நேட்டோ கூட்டணியில் இருந்து விலகும் என்று அவர் கூறி வருவதும், தற்போது ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதும் ஐரோப்பியப் பாதுகாப்பில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தும் செயலாக இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், ரஷ்யாவின் கனவு நனவாகிவிடும்.

ஏற்கனவே ரஷ்யா சில ஐரோப்பிய நாடுகளைத் தாக்கி, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் எண்ணத்தில் உள்ளது. உலகிலேயே அண்டை நாடுகளைக் கைப்பற்றி, தனது நிலப்பரப்பை விரிவாக்கும் எண்ணம் கொண்ட இரண்டு நாடுகள் உள்ளன. அவை ரஷ்யா மற்றும் சீனா தான். சீனா எப்படி இந்தியாவைத் தாக்கிப் பல பகுதிகளைக் கைப்பற்றி இன்றுவரை சொந்தம் கொண்டாடி வருகிறதோ, அதேபோலத் தான் ரஷ்யாவும் தனது அண்டை நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் உள்ளது. தற்போது நேட்டோ நாடுகளின் தலைவர்கள் அவசரமாகக் கூடி ஆராய்ந்து வருகிறார்கள். ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலை எப்படி நிவர்த்தி செய்வது என்பதே தற்போதைய பெரும் சவாலாக உள்ளது.