நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் ஒரு பாடலை தனது எக்ஸ் (Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளார். அது நடிகர் விஜய் சிறு வயதில் ராதிகாவோடு நடித்த “இது எங்கள் தீர்ப்பு” படத்தில் இடம்பெற்ற, “சின்ன தம்பி உன்னை நம்பி நாடே இருக்குதடா” என்ற பாடல். இளையராஜா இந்தப் பாடலைப் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அது வைரலாகி, சுமார் 5 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துவிட்டனர்.
இதனைச் சகித்துக்கொள்ள முடியாத சில திமுக உடன்பிறப்புகள், உடனே இளையராஜாவை வசைபாடத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, இளையராஜாவின் சாதியைக் குறிப்பிட்டுப் பேசி அசிங்கப்படுத்தி வருகிறார்கள். “இதற்காகவா கலைஞர் உனக்கு விருதுகளை வழங்கினார்? நன்றி கெட்டவனே!” என்றெல்லாம் திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் இளையராஜாவின் தாயார் குறித்துக் கூட மிகவும் அசிங்கமான கருத்துகளையும், போலியான செய்திகளையும் பரப்பி வருகிறார்கள்.
இது இசையமைப்பாளர் இளையராஜாவை மிகவும் கவலை கொள்ள வைத்ததோடு, ஆத்திரமடையவும் செய்துள்ளதாகத் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இளையராஜா இதற்கு ஒரு விளக்கத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திமுக மீது யாராவது விமர்சனத்தை வைத்தால், அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இறங்கித் தாக்குவார்கள் என்பது தற்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. இப்படியான ஒரு அடக்குமுறை அரசியலில் தான் தமிழகம் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, இதுநாள் வரை வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத பலர், அந்தத் தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விஜய்க்குத் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுவரை பொறுமையாக இருப்போம்.