சர்ச்சைக்குரிய கோடீஸ்வரர் ஜெப்ரி எப்பஸ்டீனின் பாலியல் வலையில் சிக்கி, அதிலிருந்து துணிச்சலாகப் போராடி தப்பிய முன்னாள் மாடல் ஒருவர் தற்போது காணாமல் போயுள்ளார். கடந்த சில நாட்களாகத் தனது குடும்பத்தினருடன் தினசரி பேசி வந்த அவர், திடீரென தொடர்பைத் துண்டித்துள்ளார். ஒருமுறை தன்னைத் தாக்க முயன்ற ஒரு கோடீஸ்வரரை, கையில் கிடைத்த ஒரு பாலியல் விளையாட்டுப் பொருளை (Sex Toy) ஆயுதமாகப் பயன்படுத்தித் தாக்கித் தற்காத்துக் கொண்டவர் இவர். இவரது இந்தத் துணிச்சலான செயல் ஏற்கனவே ஊடகங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இப்போது அவர் மயமாகி இருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காணாமல் போன பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகத் தன்னை யாரோ பின்தொடர்வதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். எப்பஸ்டீன் தொடர்பான வழக்குகளில் முக்கிய சாட்சியாக இருந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வரும் நிலையில், இவரது மறைவு ஒரு திட்டமிடப்பட்ட கடத்தலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அவரது வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள், செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்கள் அப்படியே இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி அவர் வீட்டை விட்டு வெளியேறியிருப்பது பல மர்மங்களை உள்ளடக்கியுள்ளது. ஜெப்ரி எப்பஸ்டீனுடன் தொடர்புடைய உயர்மட்டப் பிரமுகர்களின் ரகசியங்களை இவர் அறிந்திருக்கலாம் என்பதால், அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள யாராவது இவரை அப்புறப்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த இவருக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ‘எப்பஸ்டீன் லிஸ்ட்’ (Epstein List) தொடர்பான புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கும் போதெல்லாம், சாட்சிகளுக்கு ஆபத்து ஏற்படுவது ஒரு கவலையளிக்கும் போக்காக உள்ளது. இந்த முன்னாள் மாடலைக் கண்டுபிடிப்பதற்காகப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. அவர் பத்திரமாகத் திரும்புவார் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.