Posted in

விஜய்க்கு ஆப்பு வைத்த ஆளுனர்- பதவி ஏற்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளார் !

சற்று முன்னர், தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய், நாளை முதல்வராகப் பதவியேற்கக் கோரிக்கை விடுத்தார். 118 என்ற பெரும்பான்மை விஜயிடம் இல்லை எனக் காரணம் காட்டி, ஆளுநர் விஜய்யைத் திருப்பி அனுப்பியதாகத் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் நாளை விஜய் பதவியேற்க முடியாத நிலை தோன்றியுள்ளது. பொதுவாக ஆளுநர், விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, பின்னர் 2 வார காலத்திற்குள் சட்டசபையில் 118 உறுப்பினர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிப்பதே வழக்கம்.

ஆனால், சில வேளைகளில் ஆளுநர்கள் தமது அதிகாரத்தை இப்படியாகவும் பயன்படுத்த முடியும். இது மத்திய பிஜேபி (BJP) கட்சியின் சதியாகக் கூட இருக்கலாம். காங்கிரஸ் கட்சி, த.வெ.க (TVK) கட்சியோடு இணைந்து அரசில் பங்கெடுக்கும் நிலையில், இதனை விரும்பாத மத்திய அரசு, விஜய்க்குப் பல கெடுபிடிகளைப் போட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் இது. “முதலில் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவு என்ற கடிதத்தைக் கொண்டு வாருங்கள், பின்னரே நான் பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன்” என்று ஆளுநர் கூறியது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

எனவே, நாளை திட்டமிட்டபடி விஜய் முதல்வர் பதவியேற்க முட்டுக்கட்டை தோன்றியுள்ளது. இதேவேளை, அதிமுக கட்சியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், விஜய் பக்கம் செல்ல வேண்டும் என்று பெரும் அழுத்தம் கொடுத்ததால், அக்கட்சியில் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது. எது எப்படியென்றாலும், நாளை மறுநாள் மே 8 அல்லது 9-ஆம் தேதி, விஜய் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியோடு முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.