2ம் தடவை சந்திப்பிலும் ஆளுனர் விஜய் ஆட்சி அமைக்க மறுத்து விட்டார் என்ற செய்தி தற்போது, வெளியாகியுள்ளது.
சற்று முன்னர் 2-ம் தடவை ஆளுநரைச் சந்தித்து விட்டு விஜய் அவர்கள் புறப்பட்டுள்ளார். நேற்றைய சந்திப்பு 30 நிமிடம் நடந்தது. இன்றைய சந்திப்பு சுமார் 45 நிமிடம் இடம்பெற்றுள்ளது. எப்படி 113 வைத்து ஆட்சியை அமைப்பீர்கள்? 118 கிடைத்து விடும் என்ற ஊகத்தை எப்படி நம்புவது என்று எல்லாம் பல கேள்விகளை விஜயிடம் முன் வைத்துள்ளார் ஆளுநர். ஆனால் விஜய் இவை அனைத்திற்கும் பதில் கூறியதோடு, பெரும்பான்மையைச் சட்ட சபையில் தானே நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் விஜய் மற்றும் ஆளுநருக்கு இடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆளுநர், காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சி உங்களை ஆதரிக்கும் என்ற மிகவும் ரகசியமான கேள்விகளை கூட எழுப்பியுள்ளார். ஆனால் விஜய் இதற்கு பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சட்ட சபையில் நான் எனது பெரும்பான்மையை நிரூபிக்கிறேன். 108 ஆசனங்களை வைத்திருக்கும் பெரும்பான்மைக் கட்சிக்கே ஆட்சி அமைக்கும் அதிகாரம் உண்டு என்பதனை மிகத் தெளிவாக கூறிவிட்டார்.
நேற்றைய தினம் தொடக்கம் தமிழக ஆளுநர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த விமர்சனத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் அகில இந்திய அளவில் விஜயின் விஷயம் பேசு பொருளாக அமைந்துள்ளது. இதனால் டெல்லி, மும்பை, பெங்களூரு என்று பல தொலைக்காட்சிகளில் விஜயின் இந்த செய்தி முதல் இடம் பிடித்துள்ள நிலையில், பல்வேறு மாநில தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.
இதனால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தால் தான் இன்று (07) தானாகவே முன் வந்து, ஆளுநர் விஜயை அழைத்து பல கேள்விகளை கேட்டு, பல விஷயங்களை அறிந்து விட்டு, தாம் பதில் சொல்லி அனுப்புவதாக கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள தகவல் அடிப்படையில், ஆளுனர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.