Posted in

விஜய் பதவி பிரச்சனை- இது அதிமுக -திமுகவிற்கு வயிற்றில் புழியை கரைக்கும் விடையம்- அது ஏன் ?

விஜய் பதவி ஏற்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தூரத்தில் நின்று பார்த்து ரசிக்க முடியாத நிலையில் இருபெரும் கட்சிகள் இருக்கின்றன. காரணம் மறு தேர்தல் என்று வந்தால், இந்த இரு திராவிடக் கட்சிகளும் மயக்கம் அடைந்து விழுந்து விடும். அடுத்தடுத்து 10 தேர்தல் வந்தால் கூட, TVK கட்சி போட்டியிடும். ஆனால் திராவிடக் கட்சிகளால் முடியாது. காரணம் பணப் பட்டுவாடா செய்ய வேண்டுமே!

ஓட்டுக்கு இவ்வளவு என்று மீண்டும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை தோன்றும். ஏற்கனவே அதிமுகவில் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஆனால் மூடி மறைத்து விட்டார்கள். அதாவது 20 கோடி, 50 கோடி என்று தொகுதிக்குச் செலவு செய்து இருக்கிறோம். அடுத்த 5 வருடம் ஆட்சியிலும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் எப்படி இருப்பது என்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எனவே விஜய் கட்சியோடு இணைந்து ஆட்சி அமைப்பதே நல்லது என்று, அவர்கள் எடப்பாடியிடம் கூறி அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அதிமுக மற்றும் திமுக இணைந்து ஆட்சி என்ற பேச்சுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரணம் திருமாவளவன் கொடுத்த இன்றைய பேட்டி. அதில் அவர் விஜய் அவர்களுக்குச் சாதகமாக நேரடியாகப் பேசியுள்ளார். எனவே விசிக கட்சியின் 2 சீட் மற்றும் கம்யூனிஸ்டுகளின் 4 சீட் என மொத்தம் 6 சீட் திமுகவிடம் இல்லை என்று சொல்லலாம்.

இந்த 6 சீட் இல்லை என்றால் திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது. இவர்கள் எந்த நேரமும் விஜய் பக்கம் சாய வாய்ப்புகள் உள்ளன. எனவே எப்படிப் பார்த்தாலும் பெரும் சிக்கல் இருப்பது அதிமுக மற்றும் திமுகவிற்குத்தான். 59 இடங்களைக் கைப்பற்றியதால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால் அதிமுகதான் பெரும் சோகத்தில் உள்ளது; 3-வது கட்சியாக உருவெடுத்துள்ளது. தற்போது தேர்தல் நடந்தால் கூட, முன்னர் வென்ற இடங்களை விட விஜய்யின் TVK கட்சி மேலதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே எப்படி காலத்தைக் கடத்தினாலும் விஜய் அவர்களே ஆட்சியைக் பிடிப்பார்.