Posted in

பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது ஆளுனர் மீண்டும் மறுப்பு – நீதிமன்றத்தை அணுகும் விஜய் !

சற்று முன்னர் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், 2-ம் தடவையும் ஆளுநர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேக்கர் மறுத்துவிட்டார். இதனால் விஜய் அவர்கள், நீதிமன்றத்தை நாட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதேவேளை டெல்லியில் ராகுல் காந்தி சில ஏற்பாடுகளைச் செய்து உச்ச நீதிமன்றத்தை உடனே நாட, வழி செய்வதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

இதற்கு ஒரே வழி தான் உண்டு, சட்டப்பூர்வமாக விஜய் நகர்வது தான். எனவே அடுத்து வரும் நாட்கள் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் போல உள்ளது. இன்று நடந்த சந்திப்பு சுமூகமாக இல்லை. மிகவும் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த அளவு தமிழ்நாடே அல்லோல கல்லோலமாக இருக்க, இந்தச் சர்ச்சையைத் தீர்க்கக் கூடிய விசிக தொல். திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் இதுவரை எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை என்பது, மிகவும் வருத்தமான விஷயம்