Posted in

தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி தொடங்கியது: BJP அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது!

தமிழக ஆளுநர் அர்லேக்கர், கடந்த 2 நாட்களாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்து தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை ஓசைப்படாமல் நடத்தி வருகிறார். இதில் விஜய் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்ய உத்தரவு போட்டது, உதயநிதியின் பாதுகாப்பை மீண்டும் அதிகரித்தது மற்றும் பிளஸ் 2 முடிவுகளை உடனே வெளியிடக் கட்டளை பிறப்பித்தது எனப் பல உத்தரவுகள் அடங்கும்.

இதுபோக ஆளுநர் அர்லேக்கர், DGP-ஐ அழைத்து, முதல்வர் ஆவதற்கு முன்னர் விஜய்க்கு ஏன் முதலமைச்சர் பாதுகாப்பைக் கொடுத்தீர்கள் என்று விளக்கம் கேட்டு அவரைக் கண்டித்து அனுப்பியுள்ளார். இது இவ்வாறு இருக்கத் தலைமைச் செயலாளரை அழைத்து, பல கட்டளைகளைப் பிறப்பித்தும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது, ஆளுநர் ஆட்சி ஏற்கனவே தமிழ்நாட்டில் அமுலாகி உள்ளது தெளிவாகத் தெரிகிறது.

தமிழக மக்கள் பல வருடங்களாக BJP என்னும் மதவாதக் கட்சியைப் புறக்கணித்து வருகிறார்கள். கடந்த தேர்தலில் 234 ஆசனத்தில் வெறும் 1 ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது BJP கட்சி. ஆனால் தற்போது பார்த்தால் BJP கட்சியின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் BJP கட்சி சொல்லும் விஷயங்களையே ஆளுநர் கேட்டு நடக்க வேண்டும்; காரணம் அவர் மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி.

எனவே இந்த நிலை நீடிக்க வேண்டுமா? இதனைத் தான் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் விரும்புகிறார்களா என்பது தெரியவில்லை. திமுகவில் இருந்து வெளியேறாமல், வெளியில் இருந்துகொண்டு ஆதரவைக் கொடுக்க முடியும். ஆனால் குறைந்தபட்சம் அதனைக் கூட செய்ய இந்த இரு கட்சிகளும் தயாராக இல்லை. மறு தேர்தல் என்று ஒன்று வந்தால், அது திமுக – அதிமுகவுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.