Posted in

பதவியேற்பதற்கு முன்னரே டாஸ்மார்க்கில் லஞ்சம் பெறும் சபரிநாதன்: விஜய் காதுக்குச் செல்லாமல் தடுக்கும் புஸ்ஸி ஆனந்த்!

இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை பின்வாசல் வழியாக  வியாபாரம் நடத்த, விஜய் அணி MLA சபரிநாதனுக்கு தலா 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக வழங்கப்படுகிறது. அதுவும் விருகம் பாக்கத்தில் உள்ள 10 கடைகளில் இப்படி நடப்பதால், 10 லட்சம் கிடைக்கிறது.

ஒரு பக்கம் ஊழல் இல்லாத ஆட்சியைத் தந்துவிட வேண்டும் என்று இரவு பகலாக விஜய் போராடி வரும் நிலையில், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராகத் தேர்வாகி, இன்னும் பதவிப் பிரமாணம் கூடச் செய்யாத நிலையில், சபரிநாதன் தனது தில்லுமுல்லுகளை ஆரம்பித்துவிட்டார். இந்தச் செய்தி விஜய் காதுக்கு எட்டாதவாறு புஸ்ஸி ஆனந்த் காப்பாற்றி வருவது மிகவும் அபத்தமான விஷயம். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் பர்சனல் காரை ஓட்டும், ஓட்டுநராகப் பல வருடங்கள் இருந்து வருபவர் ராஜேந்திரன்.

மேலும் விஜய்யின் காஸ்டியூம் டிசைனராகப் பல வருடங்கள் இருந்து வருபவர் ரவி; இவரது மகன் பரத். இவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று விஜய் ஒரு பெரிய வீட்டை எடுத்து இந்த இருவர் குடும்பங்களையும் அங்கே வாழவைத்தார். சிறுவயதில் இருந்தே சபரிநாதன் விஜய்யை “அங்கிள் அங்கிள்” என்று அழைத்து வந்ததால், விஜய்க்கு சபரி மீது ஒரு தனி அன்பு இருந்தது. ஆனால், அதனை சபரி தவறாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.

விக்கிரவாண்டி மாநாடு முடிந்த கையோடு, விஜய் இளைப்பாற கேரவனில் (Caravan) உட்கார்ந்த சமயம் பார்த்து, அங்கே சபரி மற்றும் பரத் ஆகியோர் சென்றுள்ளார்கள். ஆனால், அதனைப் பார்த்த அப்பா ராஜேந்திரன், “அவர்கள் இங்கே வரக் கூடாது” எனக் கண்டித்து அனுப்பிவிட்டார். ஏமாற்றத்தோடு திரும்பிய இவர்களைப் பார்த்த காஸ்டியூம் டிசைனர் ரவி, “நான் உங்களை விஜய்யிடம் அழைத்துச் செல்கிறேன்” என்று கூறி, கேரவனுக்கு உள்ளே அழைத்துச் சென்றார்.

“அங்கிள், எங்களுக்கு ஏதாவது ஒரு பொறுப்பு கொடுங்கள், நாங்கள் உங்களோடு பயணிக்க விரும்புகிறோம்” என்று சபரி மற்றும் பரத் கூறியுள்ளார்கள். இதனைக் கேட்ட விஜய், தான் புஸ்ஸி ஆனந்திடம் பேசுவதாகக் கூறி அனுப்பி வைத்தார். அடுத்த வாரமே புஸ்ஸி ஆனந்திடம் இருந்து இருவருக்கும் அழைப்பு வந்தது. மாவட்டச் செயலாளராக ஓட்டுநர் மகன் சபரி நியமிக்கப்பட்டு, காஸ்டியூம் டிசைனர் ரவியின் மகனுக்குத் துணை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

இவ்வாறு ஒன்றரை வருடம் கழிந்த நிலையில், தேர்தல் நெருங்கி வந்தவேளை மாவட்டங்களில் உள்ள நல்ல மற்றும் திறமையான ஆட்களை வேட்பாளராக நிறுத்தலாம் என்று விஜய் எண்ணினார். ஆனால் சிலர், “ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக மக்களுக்கு நன்றாகத் தெரிந்த முகங்களையே வேட்பாளர்களாகப் போடலாம்” என்ற கருத்தை விதைத்தார்கள். இதனால் சபரிநாதனுக்கு ஜாக்பாட் அடித்தது. அவர் MLA வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டார்.

ஆதவ் அர்ஜுனா, சபரிநாதனுக்குத் தொகுதிச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் பெரும் பகுதியைச் சபரிநாதன் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது. ஆனால், தான் கூப்பிட்டு விசாரிப்பது போல விசாரித்து, ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் புஸ்ஸி ஆனந்த். தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், தலா 1 லட்சம் ரூபாயை சபரிநாதனுக்குத் திரைமறைவில் லஞ்சமாக கொடுத்து வருகிறார்கள்.. காரணம், இரவு 10 மணிக்கு மேல் ஷட்டரை மூடிவிட்டு இவர்கள் மதுவை விற்று வருகிறார்கள். விருகம்பாக்கத்தில் இரவு 12 மணி, 1 மணிக்கு எல்லாம் மது வாங்க முடியும்.

இது ஒரு பெரும் ஊழலாக இருக்க, இரவில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் பெண்கள் மீது அத்துமீறலில் ஈடுபட இது ஏதுவாக அமையும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். அப்படியென்றால் விஜய் கூறும் “பாதுகாப்பான தமிழகம்”, “பெண்கள் பாதுகாப்பு” மற்றும் ஊழல் ஒழிப்பு எப்படிச் சாத்தியமாகும்? கட்சியில் இருப்பவர், அதுவும் பதவி ஏற்கும் முன்னரே இப்படி லஞ்சம் பெற ஆரம்பித்தால் என்ன ஆகும்? மாதம் 10 லட்சம் வருமானம் வெறும் டாஸ்மாக் கடையால் ஒரு எம்.எல்.ஏ-வுக்குக் கிடைக்கிறது என்றால், மற்ற தொழில்களில் என்னவெல்லாம் லஞ்சமாகக் கிடைக்கும்?  மாதம் 20 முதல் 30 லட்சம் வரை பணம் பார்க்கிறார்கள் இந்த எம்.எல்.ஏ-க்கள். இது எப்போது விஜய் காதுகளுக்கு எட்டப்போகிறது?   “பாவம் நான் பார்த்து வளர்ந்த பையன்” என்று ஒரு இடம் கொடுத்தால், இந்த சபரிநாதன் ஊழல் பெருஞ்சாளியாக வெறும் 29 வயதில் உருவெடுத்துள்ளார்.