Posted in

நண்பர்களின் ஆசையை நிறைவேற்ற மாணவியுடன் கூட்டு பலாத்காரம் !

பெங்களூர் அருகே உள்ள ராமநகர் மாவட்டத்தில் ஒரு கல்லூரி மாணவியின் வாழ்க்கை காதலாலேயே சீரழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாகாடி பகுதியைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர், சக கல்லூரி மாணவியைக் காதலிப்பதாகக் கூறி ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். திருமண ஆசை காட்டி அந்த மாணவியுடன் நெருக்கமாக இருந்த விகாஷ், அவருக்குத் தெரியாமலேயே அந்தத் தருணங்களை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். ஒரு காதலனாகப் பாதுகாக்க வேண்டிய உறவை, ஒரு வேட்டைக்காரனைப் போலச் சிதைக்க அவர் போட்ட திட்டமே இந்தத் துயரச் சம்பவத்தின் தொடக்கம்.

விகாஷ் தான் எடுத்த அந்த வீடியோவை தனது நண்பர்களான பிரசாந்த் மற்றும் எலக்ட்ரீஷியன் சேத்தன் ஆகியோரிடம் காட்டியுள்ளார். காதலியின் அந்தரங்கத்தை நண்பர்களுக்குக் காட்டியதுடன் நில்லாமல், அவர்கள் கேட்டதற்கிணங்க தனது காதலியையே அவர்களுக்கு விருந்தாக்கத் துணிந்தார் விகாஷ். இவர்கள் மூவரும் சேர்ந்து போட்ட சதித் திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் சேத்தன் வீட்டுக்கு அந்த மாணவியை விகாஷ் வரவழைத்துள்ளார். காதலனை நம்பிச் சென்ற அந்தப் பெண்ணுக்கு அங்கே காத்திருந்தது ஒரு மாபெரும் நரகம்.

சேத்தன் வீட்டில் வைத்து விகாஷ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய மூவரும் அந்த மாணவியைப் பலவந்தப்படுத்தியுள்ளனர். மாணவி கடுமையாக மறுத்தபோது, ஏற்கனவே விகாஷ் எடுத்து வைத்திருந்த ரகசிய வீடியோவைக் காட்டி அவரை மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலுக்குப் பணிந்த மாணவியைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அகோரச் செயலையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டனர். அதன் பிறகு அந்தப் புதிய வீடியோவைக் காட்டி மீண்டும் மீண்டும் அந்த மாணவியைக் கட்டாயப்படுத்தித் தங்களின் வக்கிர ஆசைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்தச் சூழலில், இவர்கள் எடுத்து வைத்திருந்த அந்த ஆபாச வீடியோக்கள் திடீரென சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகத் தொடங்கின. தனது அந்தரங்கம் இணையத்தில் ஊர் சிரிக்க ஏலத்திற்கு வந்ததைக் கண்டு நிலைகுலைந்த மாணவி, வேறு வழியின்றித் தனது பெற்றோரிடம் கதறி அழுது உண்மையைச் சொன்னார். பதறிய பெற்றோர்கள் உடனடியாகப் போலீசில் புகார் அளிக்க, ராமநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விகாஷ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.