“கில்லி”யை ஓவர்டேக் செய்ததா “தீனா”? ரீ ரிலீஸிலும் போட்டிபோடும் அஜித் விஜய்!

“கில்லி”யை ஓவர்டேக் செய்ததா “தீனா”? ரீ ரிலீஸிலும் போட்டிபோடும் அஜித் விஜய்!

சமீபகாலமாக மாபெரும் வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் கில்லி திரைப்படம் 25 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட ரூ. 20 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்தது.அதற்கு போட்டியாக அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த “தீனா” திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா படம் நேற்று அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல விஷ்ணுவர்தன் அஜித் காம்போவில் வெளிவந்த பில்லா திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக தீனா மற்றும் பில்லா 2 இரண்டு படங்களும் சேர்த்து நேற்றைய ஒரே நாளில் ரூ. 1 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது விஜய்யின் கில்லி திரைப்படம் முதல் நாளே ரூ. 4 கோடி வரை வசூல் அள்ளியது குறிப்பிடுத்தக்கது இதன் மூலம் போட்டி போட்டுக் கொண்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய் திரைப்படங்களில் விஜய் தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.