Posted in

வரச்சொல்லி காலை வாரிய மோடி: டெல்லியில் விஜய்க்கு நடந்த அசிங்கம் !

தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பாஜக வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுப் படுதோல்வியடைந்தது. இதனால் மோடி பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பாஜகவின் அழுத்தத்தால் திமுக – அதிமுக கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது; ஆனால் அதுவும் கைகூடவில்லை. இந்த நிலையில்தான், விஜய் 118 இடங்களை நிரூபித்துத் தனித்து ஆட்சி அமைத்தார். அதற்கு எந்த வகையிலெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ, அந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசு.

இருப்பினும் அதனையெல்லாம் உடைத்தெறிந்தார் விஜய். இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு விஜய் மீது கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில்தான் விஜய் டெல்லி செல்ல அனுமதி கோரப்பட்டது. இதற்கு உடனே பச்சைக் கொடி காட்டும் போதே விஜய் சுதாரித்திருக்க வேண்டும். டெல்லி சென்று மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் என்று பல மத்திய தலைவர்களைச் சந்திக்க அனுமதி கோரினார் விஜய். அனைத்துக்கும் பச்சைக் கொடி காட்டப்பட்டதோடு, நேரமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், டெல்லி சென்று இறங்கிய மறுகணமே காட்சிகள் எல்லாம் மாறத் தொடங்கின.

முதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஜய்யைப் பார்க்க மறுத்துவிட்டார். அவசரமாகக் குஜராத் புறப்படுவதாக அறிவித்தார். ஆனால், அதேவேளையில் கேரள முதல்வரை அமித் ஷா சந்தித்துள்ளார். கேரள முதல்வர் – மோடி சந்திப்பு நேற்று 45 நிமிடங்கள் இடம்பெற்றது. ஆனால், விஜய்யை வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துப் பேசினார் நரேந்திர மோடி. இதுபோக, டெல்லியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைத் திறப்பதாக இருந்தது; ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டது பாஜக அரசு. அந்த நிகழ்வும் நடக்கவில்லை.

இதனை நன்றாகப் புரிந்துகொண்ட காங்கிரஸ் தலைமை, விஜய்யுடன் தொடர்புகொண்டு பேசியுள்ளது. “இந்த நிலையில் நீங்கள் சோனியா மற்றும் ராகுலை டெல்லியில் சந்தித்தால், அது பெரும் பூதாகரமான செய்திகளைத் தோற்றுவிக்கும். டெல்லி தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல், அகில இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இது பெரும் செய்தியாக வெளியாகும். இதனால் மோடி அரசு உங்கள் மீது மேலும் கோபமடைய வாய்ப்புகள் உள்ளன; இதனால் தமிழகத்தை அவர்கள் கடுமையாக வஞ்சிப்பார்கள்” என்று கூறியுள்ளார்கள்.

நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுச் சில வாரங்கள் தான் ஆகிறது, எனவே இந்த அளவுக்கு மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று காங்கிரஸ் கருதியது. இதனால் விஜய் இந்த விஷயத்தைச் சட்டெனப் புரிந்துகொண்டு, காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காமல் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் என அறியப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களை விடவும், விஜய் மீதுதான் ஆளும் பாஜக கடுப்பில் உள்ளது. அப்படி என்றால் விஜய்யை அசைக்க முடியவில்லை என்பதுதான் அதன் ஒரே அர்த்தம். கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி, ஸ்டாலின் என்று எந்தத் தலைவரை எடுத்தாலும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் டெல்லி அரசுக்குக் கட்டுப்பட்டே நடந்துள்ளார்கள். ஆனால், விஜய்யைப் பொறுத்தவரை அவர் மக்கள் செல்வாக்கில் இருப்பவர்; அதனால் அவர் டெல்லியைப் பார்த்துக் கிலி கொள்ளத் தேவையில்லை.

இத்தனை வருடங்களில், பாஜகவைச் சரியாக எதிர்க்க ஒரு பலமான தலைவர் எவருமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விஜய் என்கிற மாபெரும் மக்கள் சக்தி ஒன்று தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. அடுத்த 3 தேர்தல்களில் விஜய் தொடர் வெற்றி பெற்று முதல்வராக இருப்பார் என்பது தெளிவாகப் புரிகிறது. இதனைத் தவிர, போகிற போக்கில் தேசிய அளவில் தனது கட்சியை வலுப்படுத்தி, டெல்லி அரசியலிலும் குதிக்க விஜய்க்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதனை வேடிக்கை பார்க்குமா பாஜக அரசு? இல்லையே… எப்படி விஜய்யை வீழ்த்தலாம் என்றுதானே அவர்கள் எண்ணுவார்கள். அதன் ஆரம்பம்தான் இன்று அரங்கேறியுள்ளது.