நடப்பது எல்லாம் கனவா அல்லது நினைவா என்று தெரியவில்லை. விஜய்யின் பெயரையோ அல்லது த.வெ.க (TVK) கட்சியின் பெயரையோ இதுவரை தனது வாயால் உச்சரிக்காதவர் ஸ்டாலின். ஆனால், விஜய் முதலமைச்சரான மறுநாளே, மூத்த தலைவர் என்ற முறையில் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டார். அதற்கு ஸ்டாலினும் உடனடியாகச் சம்மதித்தார். “உங்கள் வீட்டிற்கே வந்து நானே பார்க்கிறேன், நீங்கள் வரத் தேவையில்லை” என்று கூறிய முதல்வர் விஜய், கோட்டையிலிருந்து கிளம்பி நேரடியாக ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்றார்.
அங்கே வாசலில் காத்து நின்ற உதயநிதி ஸ்டாலின், விஜய்யைக் கட்டித்தழுவி வரவேற்றார். அதன் பின்னர், உதயநிதி விஜய்யை உள்ளே அழைத்துச் செல்ல, வீட்டிற்குள் விஜய்யின் கையைப் பிடித்து அன்போடு கூட்டிச் சென்றார் ஸ்டாலின். அங்கே ஸ்டாலினுக்குப் பொன்னாடை போர்த்தி முதல்வர் விஜய் கௌரவித்தார்; பதிலுக்கு ஸ்டாலினும் பொன்னாடை போர்த்தி முதல்வரை கௌரவித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
இதுவரை எந்த ஒரு முதலமைச்சரும் பதவி ஏற்ற அடுத்த நாளே எதிர்க்கட்சித் தலைவரைத் தேடிச் சென்று சந்தித்தது இல்லை. இதேவேளை, முதல்வர் விஜய் சேகர்பாபுவைத் தவித்ததோடு, அவருக்குக் கை கொடுக்கவில்லை என்பது மிகக் குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு மூத்த தலைவர் என்ற ரீதியிலும், தோல்வியால் சோர்வடைந்து மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டாலினை விஜய் சந்திக்க நினைத்தது, முதல்வர் விஜய் மீதான மரியாதையை எங்கோ கொண்டு சென்றுவிட்டது.
அனைவரும் முதல்வர் விஜய்யை ஒரு பெரும் தலைவராக மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் தி.மு.க ஆதரவாளர்கள் கூட விஜய்யைப் பார்த்து விசில் அடித்தது, அக்கட்சித் தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களையும் விஜய் சந்தித்துள்ளார். இதன் மூலம் விஜய் மிகவும் ஆரோக்கியமான ஓர் அரசியலை முன்னெடுத்து வருகிறார். இதுவரை விஜய் சந்திக்காத தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எடப்பாடியை விஜய் சந்திப்பாரா என்பது தெரியவில்லை; ஏனெனில், டி.டி.வி தினகரனைத் தூண்டிவிட்டதே எடப்பாடி என்பது ஊரறிந்த உண்மை.