Posted in

விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது! முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறுவதாகச் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மனுவை அவர் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது, பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சங்கீதா தனது விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதைக் குடும்பநல நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்துள்ளது. இந்த திடீர் முடிவு, தம்பதியினரிடையே ஏற்பட்டுள்ள சமரசத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

நீண்ட நாட்களாகத் தமிழக அரசியல் களத்தில் விவாதமாக இருந்த இந்தத் தனிப்பட்ட விவகாரம், தற்போது சங்கீதாவின் இந்த முடிவின் மூலம் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முதலமைச்சர் தரப்போ அல்லது சங்கீதா தரப்போ இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.