பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின்னர், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளதைப் போல, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் எதிர்காலத்தில் நிச்சயம் நாட்டின் பிரதமராக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய ஜனநாயகம் அதற்குரிய வழியையும் வாய்ப்பையும் அனைவருக்கும் வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக அளவில் இந்தியா வல்லரசு நாடாவதைத் தடுப்பதற்கு எந்தவொரு சக்தியாலும் இயலாது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார. அதேவேளையில், தமிழக அரசியல் நிலவரங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் ஆட்சிக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த அவர், அது குறித்துக் கருத்து தெரிவிக்கப் பல அரசியல்வாதிகள் இருப்பதாகவும் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தரிசனத்தை முடித்துக் கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு டெல்லி புறப்பட்டார்.