Posted in

BREAKING NEWS : சிபிஐ கட்சி நிபந்தனையற்ற ஆதரவு – TVK கட்சிக்கு தற்போது 114 ஆசனங்கள் கிடைத்தன!

சற்று முன்னர் சிபிஐ கட்சி தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் விஜய்க்கு ஆதரவாக இருக்குமாறு அறிவுறுத்தி, தமது ஆதரவு கடிதத்தை விஜயிடம் கொடுக்க உள்ளார்கள். இதனை அடுத்து சில மணி நேரங்களில் விஜய் நேரில் சென்று சிபிஐ கட்சி அலுவலகத்தில் இந்த கடிதத்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார். தொல். திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இவை இரண்டுமே இனி தமது முடிவைச் சொல்ல வேண்டும். அவர்களும், விஜய்க்கு ஏதுவான முடிவை எடுப்பார்கள் என்று தெரிகிறது. இதனை அடுத்து இன்று மாலை 5 மணிக்கு விஜய் மீண்டும் ஆளுநரைச் சந்தித்து 118 பேர் ஆதரவைக் காட்டுகிறார்.

எனவே நாளை அல்லது நாளை மறுதினம் விஜய் அவர்கள் முதல்வராகப் பதவியேற்பார். இதற்கிடையே ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி போட்ட திட்டங்கள் எல்லாமே தவிடுபொடியாகிவிட்டன. அதிமுகவை இணைத்துத் தாமே முதல்வர் என்றும், துணை முதல்வராக உதயநிதி இருக்கலாம் என்று கூறி ஒரு நகர்வை மேற்கொண்டார் எடப்பாடி. ஆனால் இதனை ஸ்டாலின் முற்றாக நிராகரித்துவிட்டார் என்ற செய்திகள் கசிந்துள்ளன.

யார் குதிரை மீது யார் ஏறிச் சவாரி செய்வது? என்று ஸ்டாலின் கேட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்கள் ஆதரவில் எடப்பாடி முதலமைச்சர் ஆவதா? என்று அவர் சேகர்பாபுவிடம் கடிந்துள்ளார். ஏனெனில் இந்தத் திட்டத்தைச் சேகர்பாபு தான் ஸ்டாலினிடம் கொண்டு சென்று பேசியுள்ளார். “இதற்கு விஜய் முதல்வரானால் கூட பரவாயில்லை; மக்கள் எங்களை என்ன நினைப்பார்கள்? ஏற்கனவே நான் கொளத்தூரில் தோற்று இருக்கிறேன். இன்னும் எனது செல்வாக்கை நாசமாக்க நீ திட்டம் போடுகிறாயா?” என்று ஸ்டாலின் சேகர்பாபு மீது கடிந்ததாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.