Posted in

டெல்லி கஃப்பார் சந்தையில் பயங்கர தீ விபத்து: 40-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம்!

டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கஃப்பார் சந்தையின் செயின் வாலி கலியில் அமைந்துள்ள பூரி பிளாசா கட்டடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்த மொபைல் பேட்டரிகள் சேமிப்பு மற்றும் மொபைல் பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொடங்கிய தீ, அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி தீயணைப்புத் துறையின் 27 வாகனங்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரிகள் அதிகளவில் சூடானது அல்லது அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டதே தீ விபத்துக்குக் காரணம் என டெல்லி காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. கடைகளில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததும், குறுகிய பாதைகளும் தீயணைப்புப் பணிகளுக்குச் சவாலாக அமைந்தன.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, விபத்து மற்றும் கடன்களின் சேதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டுப் புகை தணிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தின் கட்டமைப்புப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து இரு கட்டடங்களையும் காலி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.