Posted in

1,000 கோடி ரூபா சூதாட்டம்- நடக்கிறது: விஜய் வெல்வரா தோற்பாரா என்று பெட் கட்டும் தொழில் அதிபர்கள்

இந்திய வரலாற்றில் இல்லாத அளவு, ரூபா 1,000 கோடிக்கு மேல் சூதாட்டம் ஒன்று பல தலை நகரங்களில் நடைபெற்று வருகிறது. இது விஜய் வெல்வாரா இல்லை தோற்பாரா என்பது குறித்து, மிகப் பெரிய புள்ளிகள் தொடக்கம் சாமானியர்கள் வரை பெட் கட்டி சூதாட்டத்தில் இறங்கியுள்ளார்கள் என தெரியவருகிறது. டார்க் வெப் எனப்படும், அங்கிகரிகப்படாத இணையங்கள் மற்றும் முகவர்கள் ஊடாக இந்த சூதாட்டம் இடம்பெற்று, மிகப் பெரிய அளவில் பலர் பணத்தை பெட் கட்டி இருக்கிறார்கள். இதன் எண்ணிக்கை 1,000 கோடியை தாண்டு என்கிறது உளவுத் தகவல், ஆனால் இது தொடர்பாக தற்போது திருமா முதன் முறையாக வாயை திறந்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாகவுள்ள நிலையில், களத்தில் நிலவும் அரசியல் பரபரப்பை விட, திரைமறைவில் நடக்கும் ‘பெட்டிங்’ (Betting) எனப்படும் சூதாட்டம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) எத்தனை இடங்களைக் கைப்பற்றும், அவர் முதல்வர் ஆவாரா அல்லது ‘கிங் மேக்கராக’ உருவெடுப்பாரா என்பதை மையமாக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதச் சூதாட்டத்தில் புழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இத்தகைய சூதாட்ட கும்பல்கள் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை, விஜய்யின் அரசியல் வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கில் பணத்தைப் பணையம் வைத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, வெளிநாட்டு இணையதளங்கள் மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற செயலிகள் வாயிலாகச் சர்வதேச அளவிலும் இந்தத் தேர்தல் சூதாட்டம் அரங்கேறி வருவது காவல் துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது சமீபத்திய பேட்டியில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் தமிழகத்தில் ஒரு ‘அரசியல் சூதாட்டம்’ நடத்தப்படுவதாகவும், இது ஒரு ஆரோக்கியமான போக்கல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முடிவுகள் நாளை காலை 8:30 மணிக்கே தெரியத் தொடங்கும் என்பதால், இன்று இரவோடு இரவாக இந்தச் சூதாட்டப் புழக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.