திருமணம் குறித்த கேள்விக்கு மாளவிகா மோகனன் பளீச் பதில்!

திருமணம் குறித்த கேள்விக்கு மாளவிகா மோகனன் பளீச் பதில்!

தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசரவைத்தார்.

இவர் பல்வேறு திரைப்படங்களில் ஹிந்தி மற்றும் தமிழ் என தொடர்ச்சியாக நடித்து வந்தபோது பேட்ட திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ரஜினியுடன் நடித்ததால் அந்த படம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு மாஸ்டர் திரைப்படம், மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து போனார்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனிடம் ரசிகர் ஒருவர் உங்களது திருமணம் எப்போது எனக்கு கேள்வி கேட்பதற்கு… என்னுடைய திருமணத்தை பார்க்க ஏன் இவ்வளவு அவசரம் என பதில் கொடுத்தார். திருமணம் குறித்து நடிகை மாளவிகா மோகன் கூறிய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.