நிவிடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், தனது மனைவிக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக ஊழியர்களுக்கு எழுதிய மின்னஞ்சலில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகின் முன்னனி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான ‘நிவிடியா’ (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), தனது மனைவியான லோரி மற்றும் குடும்பத்தினருக்குத் துரோகம் செய்துவிட்டதாக ஊழியர்களுக்கு அனுப்பிய உள்முகக் குறிப்பில் தெரிவித்துள்ளார். தனது செயல்களால் குடும்பத்தினரும் குழந்தைகளும் பெரிதும் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செய்த தவறுக்கு எவ்விதக் காரணத்தையும் கூற விரும்பவில்லை என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார். சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்பவருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங், சீன உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. நிவிடியாவின் அதிநவீன சிப்களை அமெரிக்கக் கட்டுப்பாடுகளை மீறி சீனாவிற்கு விற்பனை செய்ய முயன்றதாக அந்நிறுவனம் மீது ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜென்சன் ஹுவாங் அவரோடு கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்கள் மற்றும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதா என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகத் தொடங்கின.
இந்த விவகாரம் குறித்து நிவிடியா நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பூர்வாங்க ஆய்வில் தேசியப் பாதுகாப்போ அல்லது நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களோ பாதிக்கப்படவில்லை என்று இயக்குநர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் ஜென்சன் ஹுவாங் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், அவர் தொடர்ந்து சிஇஓ பதவியில் நீடிப்பார் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு நிவிடியா நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது சுயாதீன வழக்கறிஞர்கள் அடங்கிய குழு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.