பிரிட்டனின் நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சத்தன் லான் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நள்ளிரவு நேரத்தில், ஒட்டுமொத்த மனிதகுலத்தையுமே தலைகுனிய வைக்கும் ஒரு கொடூரமான பாலியல் வேட்டை அரங்கேறியுள்ளது. மதுபோதையில் தள்ளாடியபடி, தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 18 வயது இளம் பெண் ஒருத்தியை, அங்கு பதுங்கியிருந்த காமுகன் ஒருவன் குறிவைத்துப் பின்தொடர்ந்துள்ளான். யாரும் அற்ற அந்த இருட்டுப் பூங்காவின் புதருக்குள் வைத்து, அந்தப் பெண்ணைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து இரண்டு முறை அடுத்தடுத்து வன்புணர்வு செய்துள்ளான். இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி முடித்த அந்த அரக்கன், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்து, “என்ன.. என்ஜாய் பண்ணியா?” (Did you enjoy that?) என்று திமிரோடு கேட்டுக் கேலி செய்த அந்த வார்த்தைகள், பிரிட்டன் நீதிமன்றத்தையே உலுக்கியுள்ளன.
இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் சுற்றிக் கொண்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 28 வயதான ஷெராஸ் மாலிக் என்ற புகலிடக் கோரிக்கையாளரை பிரிட்டன் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்ற போது, விசாரணைக் களம் ஒரு பரபரப்பான க்ளைமாக்ஸ் திரைப்படக் காட்சி போல மாறியது. “நாங்கள் இருவரும் சம்மதத்துடன்தான் உடலுறவு கொண்டோம்” என்று அந்த வன்புணர்வளன் மிகவும் திமிராகத் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தான். ஆனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றக் கூண்டில் நின்று அழுதுகொண்டே தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்த போது, அங்கிருந்த ஒட்டுமொத்த நடுவர் மன்றமும் ஆத்திரத்தால் கொதித்துப் போனது.
நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின்படி, அந்தப் பெண் அன்றைய தினம் ஏற்கனவே மற்றொரு நபரால் தாக்கப்பட்டு நிலைகுலைந்து போய், பூங்காவின் புல்வெளியில் ஆபத்தான சூழலில் கிடந்துள்ளார். அந்த இக்கட்டான நிலையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, ஒரு கழுகு போலப் பாய்ந்து வந்து ஷெராஸ் மாலிக் தனது காம வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார் என்பது அறிவியல் பூர்வமான தடயவியல் சோதனைகள் (Forensic Reports) மூலம் நிரூபிக்கப்பட்டது. வெறும் 3 மணி நேரத்திற்கும் குறைவான ஆலோசனையிலேயே, நடுவர் மன்றத்தினர் ஷெராஸ் மாலிக் குற்றவாளி என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர்.
நேற்று மதியம் 12:44 மணிக்கு இந்த வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பை நீதிபதி சைமன் ஆஷ் அதிரடியாக வாசித்தார். குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், அதன்பிறகு மேலும் 4 ஆண்டுகள் தீவிரக் கண்காணிப்பு உரிமமும் (Licence Period) சேர்த்து மொத்தம் 14 ஆண்டுகள் அதிரடித் தண்டனை விதித்து உத்தரவிட்டார். “பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது உனக்கு எள்ளளவும் இரக்கமோ, வருத்தமோ இல்லை; உன் கண்களில் வெறும் ஆத்திரமும் வன்மமும் மட்டுமே தெரிகிறது” என்று சாடிய நீதிபதி, தண்டனைக் காலம் முடிந்த அடுத்த நொடியே அவன் பிரிட்டனை விட்டுப் பாகிஸ்தானுக்குக் கட்டாய நாடுகடத்தப்பட (Deportation) வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு பிரிட்டனில் புகலிடம் தேடி வரும் பிற நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது.