Posted in

சிங்கப் பெண் கேன்சல்: விஜய்க்குப் பிடிக்காத பல விஷயங்களை அரங்கேற்றும் அமைச்சர்கள்-

இன்று நடைபெற இருந்த “சிங்கப் பெண்” போலீஸ் அதிரடிப்படைத் துவக்க விழா நிகழ்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், விஜய் மிகவும் அப்செட்டாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் இன்றைய தினம் திமுக அரசுக்கு எதிரான வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட வேண்டும் என்ற முடிவில் விஜய் இருந்ததாகவும், ஆனால் அதற்கு அதிகாரிகள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. “அது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய விஜய், நேரடியாகக் கோட்டைக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்து வெள்ளை அறிக்கை தொடர்பான விவரங்களைக் கோரியுள்ளார். தானே முன்நின்று இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதால்தான், இன்று நடைபெற இருந்த ‘சிங்கப் பெண்’ துவக்க விழாவை ரத்துச் செய்தார் என்ற தகவல் கசிந்துள்ளது. இன்னும் சில அரசு அதிகாரிகள் திமுக ஆதரவாளர்களாக இருப்பதனால், விஜய் போடும் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தாமதம் காட்டி வருகிறார்கள் என்பதே உண்மை.

இது இவ்வாறு இருக்க, மறுமுனையில் விஜய் டெல்லியில் தங்கியிருந்த வேளையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து அதிமுகவிலிருந்து வரும் முக்கிய உறுப்பினர்களை உள்வாங்கியுள்ளார்கள். இதில் ஊழலில் சிக்கி இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ள சில அதிமுக பிரமுகர்களையும் தவெக இணைத்துக் கொண்டது என்ற விஷயம் / விடயம் விஜய் காதுகளுக்கு எட்டியுள்ளது. “எப்படி அவர்களின் பின்புலத்தைப் பார்க்காமல் கட்சியில் இணைத்தீர்கள்?” என்று ஆதவ் அர்ஜுனா மீது கடிந்துள்ளார் விஜய்.

இவை அனைத்துமே இன்று நடந்த சம்பவங்கள். ஒருமுனையில் ஊழலற்ற நல்லதொரு ஆட்சியைத் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்று இரவு பகலாக விஜய் தனி ஆளாக நின்று செயல்படும்போது, சில அமைச்சர்கள் மட்டும் தாமே சில முடிவுகளை எடுத்து விஜய்க்குப் பிடிக்காத செயல்களைச் செய்து வருகிறார்கள். அதிமுக பிரமுகர்களைத் தவெகாவில் இணைப்பது தொடர்பாகத் தவெக தொண்டர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளார்கள். அடிமட்டத் தொண்டர் முதல் நடுநிலைத் தொண்டர்கள் வரை மனக்கசப்பில் உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.

இப்படிக் கட்சிக்கு உள்ளே ஏற்பட்டுள்ள நெருக்குதலை விஜய் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. மேலும் சொல்லப்போனால் இது ஒரு பெரும் சவாலாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். கட்சியில் உள்ள தலைவர்கள் எப்படியென்றாலும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தே உள்வாங்குகிறார்கள். ஆனால் விஜய் அவர்களோ நல்லதொரு ஆட்சியைக் கொடுக்கவேண்டும் என்று போராடுகிறார். இவை இரண்டுக்கும் இடையே பெரும் மோதல் போக்குத்தான் தற்போது தோன்றியுள்ளது. இதுவே தற்போதைய யதார்த்த நிலை ஆகும்.