Posted in

ஸ்பெயினில் மைதானத்தில் கோல்கீப்பருடன் மோதிய வீரர் ஹெசஸுஸ் டி மிகுவேல் மரணம்!

ஸ்பெயினின் லலிகா 2 கால்பந்து தொடரில் டெனரிஃப் மற்றும் எஃப்.சி. அந்தோரா அணிகளுக்கு இடையிலான போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியின் கூடுதல் நேரத்தில், 30 வயதான டெனரிஃப் அணியின் முன்னணி ஃபார்வர்டு வீரர் ஹெசஸுஸ் டி மிகுவேல் பந்தை நோக்கி ஓடிய போது எதிரணியின் கோல்கீப்பர் ஹெசஸுஸ் ஒவோனோவுடன் எதிர்பாராதவிதமாக மோதினார். கோல்கீப்பரின் முழங்கால் அவரது மார்பில் கடுமையாக மோதியதில் மிகுவேல் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மாறடைப்புக்கு ஆளானார்.

மைதானத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நவம்பர் 3-ஆம் தேதி காலை 8:00 மணியளவில் ஹெசஸுஸ் டி மிகுவேல் உயிரிழந்ததாக டெனரிஃப் கால்பந்து கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து லலிகா நிர்வாகம் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட முன்னணி ஸ்பானியக் கால்பந்து கிளப்புகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளன.

ஸ்பானிய கால்பந்து உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவையொட்டி இந்த வாரம் நடைபெறும் ஐரோப்பிய யுவேஃபா (UEFA) கால்பந்து போட்டிகளின் தொடக்கத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.