கீழே வீடியோவை இணைத்துள்ளோ பாருங்கள் மேட்டர் புரியும்:
திருடனுக்கு தேள் கொட்டியது போல என்று கூறுவார்கள். ஆனால், இது அதற்கும் மேல். திருடனைப் பிடிக்கப் போலீசார் நாயைப் பயன்படுத்தியதால், அது தனது பங்கிற்குத் திருடனின் குதத்தைப் பதம் பார்த்துள்ளது. போதாத குறைக்கு அவரது ஜொக்கர் பேண்ட் கழன்றுள்ளது. நல்லவேளையாக நாய் முன்பக்கம் கடிக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் வாழ்க்கையையே தொலைத்திருப்பார். உண்மையில் இது கொஞ்சம் ஓவர் தான்.
திருடன் வலியால் துடித்து, அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதனை அசட்டை செய்யாமல் போலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளார்கள். இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், அவர் மாடியில் இருந்து தப்ப முனைந்த காட்சிகள் தான். பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மாடியில் அவர் தள்ளாடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
மாடியில் இருந்து கீழே குதித்த அந்த இளைஞர், அங்கிருந்த ஒரு ஆற்றில் இறங்கித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், விடாக்கண்டனாகப் பின்தொடர்ந்த பொலிஸ் நாய், தண்ணீருக்குள்ளும் அவரை விடாமல் துரத்திச் சென்று கவ்விப் பிடித்தது. நாய் ஆடையைப் பிடித்து இழுத்ததில், அவரது கால்சட்டை முழுவதுமாக இறங்கி, இடுப்புக்குக் கீழே நிர்வாணமான நிலையிலேயே அவர் போலீசாரிடம் பிடிபட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆற்றில் தத்தளித்தபடியே நாயிடம் கடியும் வாங்கி, கௌரவத்தையும் இழந்த அந்த இளைஞரை போலீசார் மீட்டனர். திருடச் சென்ற இடத்தில் நாயிடம் சிக்கி, ஊர் சிரிக்கக் கைது செய்யப்பட்ட அந்த இளைஞரின் நிலை தற்போது பெரும் கேலிக்குள்ளாகி வருகிறது.