Posted in

என்னை முதலமைச்சர் ஆக்க முனைந்தார்கள்” – அதிமுக, திமுக மீது திருமா போட்ட அதிரடி வெடிகுண்டு

இன்று சட்டமன்ற நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன் ஒரு பெரும் வெடிகுண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். தன்னை முதலமைச்சர் ஆக்க அதிமுக முனைந்ததாகவும், அதற்கு திமுகவின் அனுமதியும் கோரப்பட்டதாகவும் அவர் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். திருமாவின் இந்தத் திடீர் வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதாவது, விஜய் பெரும்பான்மை பெறும் வரை, கடைசி நொடி வரை அதிமுக இதனைத் தடுக்கப் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இவ்வளவு தைரியத்தை எடப்பாடி பழனிசாமிக்கு யார் கொடுத்தது? இதன் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் ஆளுநர் விஜய்யின் பதவியேற்பைத் திட்டமிட்டே தாமதப்படுத்தி வந்த நிலையில், இப்படி ஒரு சதிச் செயலைச் செய்ய எடப்பாடிக்குக் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டமா என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது இதனைத் தொல். திருமா ஏன் வெளியிடுகிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்தச் சலுகை காரணமாகத்தான் திருமா தனது முடிவைச் சொல்ல இவ்வளவு காலம் இழுத்தடித்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள அனைவரும் விஜய்க்கு ஆதரவான நிலையை எடுத்த பின்னரும் அவர் மௌனம் காத்தார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கிய தொல். திருமா, இரண்டு நாட்களாக எந்த ஒரு பதிலையும் தராமல் பதுங்கி இருந்தது எதற்காக என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவை எல்லாமே ஒரு புரியாத புதிராகவே நீடிக்கின்றன.