Thug Life படத்தில் 3 கமலஹாசன் அதில் ஒரு கமலஹாசனோடு இணைகிறார் சிம்பு

Thug Life  படத்தில் 3 கமலஹாசன் அதில் ஒரு கமலஹாசனோடு இணைகிறார் சிம்பு

Thug Life (“தக் லைஃப்” ) என்ற படத்தை மணிரத்தினம் இயக்கி வரும் நிலையில், படம் தொடர்பாக பல சூவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் 3 வேடங்களில் கமல் நடிக்கிறார். தாடி வைத்த கமல் பாத்திரம் படமாக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில். அந்த காட்சிகள் எடுக்க முன்னரே திடீரென கமல் தாடி மீசையை ஷேவ் செய்தது, இயக்குனர் மணிரத்தினத்தை கோவமடைய வைத்துள்ளதாம். ஏன் சார் இவர் சொல்லாமல் இதனைச் செய்தார் ? என்று மணிரத்தினம் அப்செட்டாக உள்ளாராம்.

இது இவ்வாறு இருக்க, இதுவரை எடுத்த காட்சிகளை போட்டுப் பார்த்த மணிரத்தினம், மற்றும் படக் குழுவினர் ஆஹா சூப்பரா காட்சிகள் வந்திருக்கு என்று சொல்லி ஆறுதல் அடைந்துள்ளார்கள். 3 வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த கதை தான் “தக் லைஃப்” அதில் ஒரு காலகட்டத்தில் கமலுடன் இணைகிறார் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு.

தக் லைஃபில் கமல் மற்றும் சிம்பு இணைவதால், இரண்டு பேரின் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்பை இந்தப் படம் தோற்றுவித்துள்ளது. அதுமட்டும் அல்ல படத்தை மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் எடுத்து வருகிறாராம் மணிரத்தினம். நிச்சயம் இந்த படம் கமல், சிம்பு மற்றும் மணிரத்தினத்திற்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.