Posted in

பதவியேற்க்காத TVK MLA-க்கள்: எப்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள்: சிக்கலா ?

சில த.வெ.க (TVK) சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணையம் கொடுத்த வெற்றிச் சான்றிதழைச் சட்டமன்றத்திற்கு எடுத்து வரவில்லை. இது தவிர, மாற்றுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் சான்றிதழைக் கொண்டு வரவில்லை. இதனால் அவர்களால் முறைப்படி பதவியேற்க முடியவில்லை. இது நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இருப்பினும், தற்காலிக அவைத் தலைவரை (Pro-tem Speaker) நேரடியாகவும் தனிமையிலும் சந்தித்துப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. பல ஊர்களிலிருந்து சட்டமன்றம் வந்த உறுப்பினர்கள் சிலர், தமது சான்றிதழ்களைப் பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் தான் இந்தச் சிக்கல் தோன்றியுள்ளது. குறிப்பாக, த.வெ.க கட்சியில் முதன்முறையாகச் சட்டமன்றம் செல்லும் புதிய உறுப்பினர்கள் சிலருக்கு இந்த நடைமுறைகள் குறித்துப் போதிய புரிதல் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும், இன்று இரவோடு இரவாகத் தமது ஊர்களுக்குச் சென்று சான்றிதழை எடுத்து வந்து, உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளுமாறு த.வெ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. அது நள்ளிரவு 12 மணியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் சான்றிதழைத் தவறவிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள். அதன் பின்னரே, நாளை த.வெ.க கட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.