Posted in

பாலியல் புகார் அதிரடி நடவடிக்கை! தவெக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் கட்சியிலிருந்து நீக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரான ‘விஜய்’ மோகன் மீது கட்சி பெண் நிர்வாகி ஒருவர் கடுமையான பாலியல் தொல்லை மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி வரும் தவெக-வின் முக்கிய நிர்வாகியே இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளது அரசியல் வட்டாரத்திலும், கட்சியின் தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மா.செ. விஜய் மோகன் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனக்குத் தொடர்ந்து தவறான நோக்கத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மாதவிடாய் (Periods) நேரத்திலும் கூடத் தனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்து, எல்லை மீறி நடந்துகொள்ள முயன்றதாக அவர் அடுக்கடுக்கான புகார்களைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இன்ஸ்டாகிராம் சாட் உரையாடல்களின் திரைப் பதிவுகள் (Screenshots) இந்த விவகாரத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியிடம் இத்தகைய மன்மத லீலைகளில் ஈடுபட்டது குறித்து ஆதாரங்களுடன் தலைமைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தவறு இழைக்கப்பட்டிருப்பது உறுதியானால் மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுப் பதவியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சியின் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக நிர்வாகி மீதான இந்த பாலியல் புகார் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.