Posted in

தவெக -வின் 10 முக்கிய விக்கெட்டுகளை தட்டித்தூக்கிய திமுக: அதிர்ச்சியில் விஜய்- ஆட்சி கவிழ்ப்பு இதுதானா ?

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) உள்ள மிக முக்கியமான 10 சட்டமன்ற உறுப்பினர்களை, எதிர்க்கட்சியான திமுக தன் பக்கம் தட்டித் தூக்கியுள்ளதாகப் பரவலாகச் செய்திகள் கசிந்து வரும் நிலையில், பிரபல ஊடகவியலாளரான பாண்டே இதனை நேற்று இரவு உறுதிசெய்துள்ளார். இருதரப்பிற்கும் இடையே ஏற்கனவே ரகசியப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமுகமாக முடிந்துவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் மிக விரைவில் திமுக பக்கம் செல்லத் தயாராக இருப்பதாகவும் தற்பொழுது கூறப்படுகிறது. இன்னும் அதிரடியான விஷயம் என்னவென்றால், திமுகவின் இந்த ஆபரேஷனில் சிக்கியுள்ள அந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும், தற்பொழுது தவெக அரசுக்குள் இருந்துகொண்டே அதை வீழ்த்துவதற்காக வேலை செய்யும் ‘ஸ்லீப்பர் செல்களாக’ செயல்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

இதனை முழுமையாக மனதில் வைத்துக் கொண்டுதான், மேடைகளில் அடிக்கடி பேசும்போது மு.க.ஸ்டாலின் அவர்கள், “விஜய்யின் இந்த ஆட்சி 3 மாதம் கூட தாங்காது, 6 மாதம் கூட நீடிக்காது” என்று ஆக்ரோஷமாக முழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய கூட்டணி அரசியல் சூழலில், தங்களுக்கு ஆதரவளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையே (VCK) எந்த அளவிற்கு நம்ப முடியும் என்று தெரியாத ஒரு இக்கட்டான நிலை தவெகவிற்குத் தோன்றியுள்ளதால், தவெக …. அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் முக்கிய புள்ளிகளைத் தங்களது வலைக்குள் இழுக்கும் வேலையை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, தவெக தரப்பிலும் மாபெரும் அரசியல் ‘கவுண்டர் அட்டாக்’ ஒன்று தயாராகி வருகிறது. அதிமுகவிலிருந்து மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அதிரடியாக ஆளுங்கட்சியான தவெக பக்கம் வர உள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில், அவர்கள் அனைவரையும் அடுத்து நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக சின்னத்தில் போட்டியிட வைத்து, மீண்டும் வெற்றி பெறச் செய்வதன் மூலம் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஒரு நிலையான மற்றும் அசைக்க முடியாத பெரும்பான்மை பலத்தை அமைத்துவிட முடியும் என்பதே ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோரின் மாஸ்டர் பிளான் ஆக உள்ளது. தற்பொழுது தவெகவிற்குள் மூன்று முக்கிய பவர் சென்டர்கள் இயங்கி வருகின்றன.

அதில் முதலாவது முதலமைச்சர் விஜய்யின் நேரடி அணி, இரண்டாவது பொதுச்செயலாளர் ஆனந்தின் அணி, மற்றும் மூன்றாவது அதிரடி ஆக்சனில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா + செங்கோட்டையன் கூட்டணி. இதில் இந்த ஆதவ் மற்றும் செங்கோட்டையன் கூட்டணியே தற்பொழுது கட்சியில் மிகவும் பலம் வாய்ந்த பவர் சென்டராக உருவெடுத்துள்ளது. ஆட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த நாளுக்கு நாள் பல்வேறு முக்கிய  தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை தவெகவில் இணைக்கும் அசுர வேக வேலையை இந்த அணியே முன்னின்று கவனித்து வருகிறது. அதேநேரம், கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையும், நிர்வாக ரீதியாக வழி நடத்துவதையும் ஆனந்த் கவனித்துக் கொள்கிறார். இதனால் விஜய் அவர்கள் எவ்வித சிரமமுமின்றி தமிழக முதல்வராகத் தனது அடுத்தகட்ட மக்கள் நலத்திட்டங்களை அமைதியாகச் செதுக்கி வருகிறார்.

குறிப்பாக, மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தனக்கு அதிமுகவில் இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்தக் கட்சியில் இருந்து மேலும் 10 பலமான விக்கெட்டுகளை தவெக பக்கம் இழுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலப்பரீட்சை மட்டும் திட்டமிட்டபடி நடந்து முடிந்துவிட்டால், பிரதான எதிர்க்கட்சியாக மாறத் துடிக்கும் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்து அதள பாதாளத்தில் போய் விழுந்துவிடும் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் அதிமுக  மீண்டு வருமா என்பதே மாபெரும் சந்தேகக்குறியாக மாறிவிடும், இதுவே தற்போதைய தமிழக அரசியலின் நிதர்சனமான யதார்த்த நிலை!