விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து விட்டதாகவும், சங்கீதா தனது தாய்-தந்தையோடு லண்டனில் தங்கியுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் எந்த ஒரு உண்மையும் இல்லை. சொல்லப்போனால், விஜய்யும் சங்கீதாவும் நீலாங்கரை வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆனால் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். விஜய் மேல் மாடியில் உள்ள தனது அலுவலகம் மற்றும் கட்சிப் பணிகளுக்கான பகுதியில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட இடத்தில் வசிக்கிறார். இதேவேளை, சங்கீதா கீழ் தளத்தில் வாழ்ந்து வருகிறார். அவருடன்தான் விஜய்யின் மகன் மற்றும் மகள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தந்தை விஜய்யுடன் மகளும் மகனும் பேசுவதில்லை; இது விஜய்யை மிக மிக பாதித்துள்ள ஒரு பெரும் விஷயம். சிறிய பிரச்சனைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கும் சங்கீதா, தேவையற்ற விஷயங்களை எல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லி, அப்பா விஜய் மீது வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்பதே விஜய் அவர்களின் கருத்தாக உள்ளது. இதனைத் தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் விஜய் சில தினங்களுக்கு முன்னர் பகிர்ந்துள்ளார்.
இதுபோக சங்கீதாவுக்குப் பின்னால் ஒரு பெரிய மர்மக் கும்பல் உள்ளதாகவும், அவர்கள் சொல்வதையே சங்கீதா தொடர்ந்து கேட்டும் செய்தும் வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கும்பல் சங்கீதாவை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறது. இதேவேளை சங்கீதா போனில் பல மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பதாக, வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தெரிவித்த கருத்தும் சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம், வழக்கறிஞரைப் பார்த்து விவாகரத்து படிவத்தில் கையெழுத்துப் போட்டார் சங்கீதா. ஆனால் அதனை உடனே நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லவில்லை அவரது வழக்கறிஞர். இதனை இழுத்தடிப்பு செய்து ஜனவரி முடிவில்தான் தாக்கல் செய்தார்கள். தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளை, இந்த விவாகரத்து வழக்கை ஒரு முக்கிய பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்த ஒரு சக்தி பெரும் திட்டம் போட்டு காய் நகர்த்தியுள்ளது. இந்த மர்ம கும்பலில் சிக்கியுள்ளார் சங்கீதா. இது இவருக்குப் புரிகிறதா என்பது கூடத் தெரியவில்லை.
மேலும் சொல்லப்போனால், சங்கீதா ஒரு கணிசமான அளவு ஜீவனாம்சத் தொகையைக் கோரியுள்ளார் என்று அறியப்படுகிறது. குறித்த இந்த மர்மக் கும்பல் சங்கீதாவை வைத்து ஒரு பெரிய பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த இருந்தது. ஆனால் அது விஜய் தரப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. விஜய் சில வாரங்களுக்கு முன்னர்தான் சங்கீதாவோடு பேசி, சுமுகமான ஒரு தீர்வை எட்டுவோம் என்று கூறியுள்ளார். இதன் காரணத்தால்தான் கடைசி நேரத்தில் சங்கீதா மனதை மாற்றிக் கொண்டதாகவும், இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு “நோ” சொன்னதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு திட்டமிட்ட தேதியில் நடந்திருந்தால், சங்கீதா தெரிவிக்க இருந்த கருத்துகளே இன்றுவரை பெரும் செய்தியாக இருந்திருக்கும்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அழுதுகொண்டே பேட்டி கொடுக்க வேண்டும், அப்படிச் செய்தால் மட்டுமே விஜய்க்கு எதிராகப் பெண்கள் திரும்புவார்கள் என்பது கூட சங்கீதாவுக்கு இந்த மர்ம கும்பலால் போதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு மிகவும் விழிப்போடு இருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. விஜய் அவர்கள் தனது சொத்து விவரங்களைத் தவறாகக் காட்டியதாகச் சங்கீதா தெரிவிக்க வேண்டும் என்றும், சில ஆதாரங்களைக் காட்டி விஜய்யின் இரண்டு வேட்புமனுக்களையும் ரத்து செய்யவும் இந்த மர்ம கும்பல் சங்கீதாவை வைத்து இயக்க இருந்தது. இதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு விஜய்யைச் சுற்றி எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத பல மர்ம முடிச்சுகள் போடப்பட்டு வருகின்றன, சதி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் விஜய் அவர்கள் உடைத்து முன்னேறி வருகிறார். சாதாரண மனம் படைத்த ஒருவராக இருந்தால், என்றோ எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஓடி இருப்பார்கள். விஜய் மட்டுமே உறுதியான மனத்தோடு போராடி வருகிறார் என்பதே உண்மை நிலை.