விவாகரத்தாகி 9 வருடத்திற்கு மறுமணம் செய்துக்கொள்ளப்போகும் VJ ரம்யா!

விவாகரத்தாகி 9 வருடத்திற்கு மறுமணம் செய்துக்கொள்ளப்போகும் VJ ரம்யா!

தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக விஜே ரம்யா விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக பார்க்கப்பட்டார்.

இது தவிர இவர் திரைப்படம் மற்றும் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தொகுத்து வழங்கி வருகிறார். கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்து வரும் இவர் மங்காத்தா , ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை ,மாஸ்டர், சங்க தலைவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே VJ ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் சில வருடங்களில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் விவாகரத்து ஆகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. ஆம், அவர் வெளியிட்டுள்ள பதிவு அப்படித்தான் இருக்கிறது.சிங்கிளாக இருப்பது பற்றியும், Relationship பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதை நீங்களே பாருங்கள்.